அறிவியல் ஆயிரம்
ரத்த அழுத்தம் குறைய
டீ குடிப்பது மற்றும் ஆப்பிள், திராட்சை உள்ளிட்ட பெர்ரி வகை பழங்களை சாப்பிடுதல், உடலில் ரத்த அழுத்த உயர்வை குறைப்பதற்கு தீர்வாகிறது. மேலும் இருதய நோய்களுக்கு எதிராகவும் போராடுகிறது என பிரிட்டன் - அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. நார்போல்க் நாட்டில் 25,168 பேரின் உணவு முறையையும், ரத்த அழுத்தத்தையும் ஆய்வு செய்தனர். இதில் மேற்கண்ட உணவு முறைகளை எடுத்துக்கொண்டவர்களுக்கு, மற்றவர்களை விட ரத்த அழுத்தம் குறைவாக இருந்தது. ரத்த அழுத்தம் அதிகமிருந்தால், ரத்த நாளங்கள், இருதயத்துக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது.
தகவல் சுரங்கம்
வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் 'வெள்ளை மாளிகை'. உலகின் அதிகாரமிக்க இடங்களில் ஒன்று. இதனால் உலக நாடுகளின் பார்வை எப்போதும் இருக்கும். இது வாஷிங்டனில் பென்சில்வேனியா அவென்யூவில் உள்ளது. இது அயர்லாந்தின் ஜேம்ஸ் ஹோபனால் வடிவமைக்கப்பட்டது. நியோ கிளாசிக்கல் கட்டடக்கலையில் வெள்ளை நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 1792 முதல் 1800 வரை இதன் கட்டுமானப்பணி நடந்தது. 1801ல் இருந்து அதிபர் மாளிகையாக செயல்படுகிறது. 1814 போரில் தீயில் சேதமானது. பின் மறு சீரமைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE