பொது செய்தி

இந்தியா

ராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள்

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
அகோலா:நாடு முழுதும் தசரா பண்டிகையில், ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது. ஆனால், மஹாராஷ்டிராவில் ஒரு கிராம மக்கள், ராவணனை வழிபடுகின்றனர். மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்., கூட்டணி ஆட்சி அமைந்து உள்ளது.இம்மாநிலத்தின் சங்கோலா கிராமத்தில், 10 தலைகள், 20 கரங்களில் ஆயுதங்களுடன், இலங்கை மன்னன் ராவணன்

அகோலா:நாடு முழுதும் தசரா பண்டிகையில், ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது. ஆனால், மஹாராஷ்டிராவில் ஒரு கிராம மக்கள், ராவணனை வழிபடுகின்றனர்.



latest tamil news




மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்., கூட்டணி ஆட்சி அமைந்து உள்ளது.இம்மாநிலத்தின் சங்கோலா
கிராமத்தில், 10 தலைகள், 20 கரங்களில் ஆயுதங்களுடன், இலங்கை மன்னன் ராவணன் கருங்கற்சிலையாக காட்சி அளிக்கிறார். அவரை, அங்குள்ள மக்கள், 200 ஆண்டுகளுக்கும் மேலாக கடவுளாக வழிபடுகின்றனர்.


latest tamil news



இது குறித்து, பூஜாரி ஹரிபாவ் லகாதே கூறியதாவது:நாடு முழுதும் தீமைக்கு எதிரான வெற்றியைகுறிக்கும் வகையில், தசரா பண்டிகையில் ராவணனின் உருவ பொம்மை
எரிக்கப்படுகிறது.இந்த கிராம மக்கள், ராமபிரானை நம்புகின்றனர்.அறிவுக்கூர்மை மிகுந்த ராவணனை வணங்குவதால் மகிழ்ச்சி, அமைதி, மன நிறைவு கிடைப்பதாக நினைக்கின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

ராவணன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழாவில், நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு, கொரோனா காரணமாக, விழா எளிமையாக நடக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramani T S - chennai,இந்தியா
26-அக்-202014:13:55 IST Report Abuse
Ramani T S ராவணனை காட்டிலும் கொடிய எம் ஜி ஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்றோரை தெய்வமாக கொண்டாடும் மாக்கள் இருக்கும்போது ராவணனை கொண்டாடுபவர்களும் இருப்பதில் வியப்பென்ன?
Rate this:
Cancel
Shekar - Mumbai,இந்தியா
26-அக்-202011:56:49 IST Report Abuse
Shekar ராவணனோ, துரிதனன்னோ கொடுங்கோல் மன்னர்கள் அல்ல, தங்களின் சுய பகைமை உணர்வால் தடம் மாறியவர்கள்
Rate this:
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
26-அக்-202008:01:56 IST Report Abuse
sankar நாசரு காலை கூட நால்லதொரு பகையை பெற்றேன் என்று ராவணன் சொல்வதாக கம்பர் எழுதுகிறார் . சாகும் பொது தெய்வத்தின் கையில் சாவது ராவணன் நராகசுரன் மகிஷன் ஆகியோரின் பாக்கியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X