அமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- என்பிசி செய்தியாளர்| Dinamalar

அமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- என்பிசி செய்தியாளர்

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (6)
Share
வாஷிங்டன்:அமெரிக்காவின் என்பிசி தொலைக்காட்சி மிகவும் புகழ்பெற்றது. ஒவ்வொருமுறை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் சமயத்திலும் எக்ஸிட் போல் எனப்படும் களநிலவர வாக்குப்பதிவை ஆய்வுசெய்யும் முக்கிய செய்தி சேனல் என்பிசி. உலகம் முழுவதும் தேர்தலின்போது வாக்களித்து விட்டு வெளியே வருபவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என ஊடகங்கள்

வாஷிங்டன்:அமெரிக்காவின் என்பிசி தொலைக்காட்சி மிகவும் புகழ்பெற்றது. ஒவ்வொருமுறை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் சமயத்திலும் எக்ஸிட் போல் எனப்படும் களநிலவர வாக்குப்பதிவை ஆய்வுசெய்யும் முக்கிய செய்தி சேனல் என்பிசி.latest tamil newsஉலகம் முழுவதும் தேர்தலின்போது வாக்களித்து விட்டு வெளியே வருபவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என ஊடகங்கள் கணிக்கும். சில நேரங்களில் ஊடகங்களின் கணக்கு சரியாக இருக்கும். சில சமயங்களில் தவறாக இருக்கும். தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சமூக விலகலைப் பின்பற்றி வாக்களிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த நேரத்தில் கள நிலவரத்தை கண்காணிப்பது மிக கடினம். 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் எக்ஸிட் போல் கணக்கெடுப்பு மூலமாக யார் ஆட்சி அமைப்பார்கள் என தெரிந்து கொள்வது மிகக் கடினம் என கோஸ்டஸ் பனாகோபோலஸ் தெரிவித்துள்ளார். இவர் என்பிசி செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் மற்றும் வட கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் பேராசிரியர் ஆவார். இவரது இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது .


latest tamil newsஒரு எலக்சன் பூத்தில் எத்தனை வாக்குகள் உள்ளன, அதில் எத்தனை வாக்குகள் செலுத்தப்பட்டு உள்ளன, அஞ்சல் வாக்குகள் எவ்வளவு உள்ளிட்ட பல விஷயங்களை நுட்பமாக ஆய்வு செய்ய அமெரிக்க தேர்தல் கமிஷன் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும். கொரோனா தாக்கம் காரணமாக வாக்கு சதவீதத்தை உடனடியாக ஊடகங்களுக்கு தெரிவிக்க முடியாத நிலை உள்ளதால் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ முடிவை வெளியிடும்வரை ஊடகங்களின் கருத்துக்கணிப்பு செல்லுபடி ஆகாது என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X