2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் ராகுல்: லண்டன் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளார்

Updated : அக் 27, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (46)
Share
Advertisement
காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை உயர்த்தவும், மக்கள் தலைவராக தன்னை முன்னிறுத்தவும், ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் உதவியை, காங்., - எம்.பி., ராகுல் நாடியுள்ளார்; இதற்காக, 100 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.எதிர்பார்ப்புகடந்த, 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில், காங்., படுதோல்வி அடைந்தது. கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகி,
லோக்சபா தேர்தல், ராகுல், லண்டன்நிறுவனம், உதவி,

காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை உயர்த்தவும், மக்கள் தலைவராக தன்னை முன்னிறுத்தவும், ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் உதவியை, காங்., - எம்.பி., ராகுல் நாடியுள்ளார்; இதற்காக, 100 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


எதிர்பார்ப்பு

கடந்த, 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில், காங்., படுதோல்வி அடைந்தது. கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகி, தற்காலிக தலைவராக அவரது தாய் சோனியா இருந்து வருகிறார். அடுத்தாண்டு துவக்கத்தில் நடக்கும் கட்சித் தேர்தலில், ராகுல் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், ராகுல் மற்றும் அவரது சகோதரியும், கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா, புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளனர். ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் உள்ள லண்டனைச் சேர்ந்த ஒரு பொதுத் தொடர்பு நிறுவனத்துடன், 100 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கட்சி இழந்த செல்வாக்கை மீட்பது, பா.ஜ.,வின் பிரசாரத்தை முறியடிப்பது, மக்கள் விரும்பும் தலைவராக ராகுலை உயர்த்துவது தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.இந்த நிறுவனத்தின் உயரதிகாரிகளுடன், டில்லியில் ராகுல் மற்றும் பிரியங்கா ஆலோசனைகள் நடத்தியுள்ளனர்.

கடந்த இரண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள் மற்றும் அது தொடர்பான தகவல்கள், அந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், அடுத்த தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து தரும்படி கேட்கப்பட்டுள்ளது.அடுத்த தேர்தலில், மூன்று இலக்க தொகுதிகளில் வெல்வதற்காக, அந்த நிறுவனம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.


அதிருப்தி

நாடு முழுதும், 25 ஆயிரம் கி.மீ., துார சைக்கிள் பயணத்தை ராகுல் மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மத்தியில், இந்த சைக்கிள் யாத்திரை துவங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் மூத்த தலைவர்கள், 23 பேர் இணைந்து, தலைமை குறித்து முடிவெடுக்கும்படி, சோனியாவுக்கு சமீபத்தில் கடிதம் எழுதினர். மேலும், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் கட்சிக்குள் அதிருப்தியாளர்கள் உருவாகியுள்ளனர். இதையடுத்தே, கட்சியை வலுப்படுத்த, லண்டன் நிறுவனத்தின் உதவியை நாடுவதற்கு, ராகுல் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
- புதுடில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMACHANDRAN - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
27-அக்-202015:00:01 IST Report Abuse
RAMACHANDRAN முடியல ....
Rate this:
Cancel
Rajasekaran - Singapore,சிங்கப்பூர்
27-அக்-202010:10:47 IST Report Abuse
Rajasekaran கூரையேறி கோழி பிடிக்காதவன், வானமேறி வைகுண்டம் போன கதை
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
27-அக்-202000:48:07 IST Report Abuse
unmaitamil கட்டி கொடுத்த சோறும், சொல்லி கொடுத்த சொல்லும் சில நாட்களுக்குத்தான்... அதன் பிறகு சொந்த அறிவும், திறமையும் வேண்டும். அது இருந்தால் மட்டுமே நல்ல தலைவன் ஆகலாம். பப்பு... நீ என்றும் பப்பு தான். திறமையான, முதிர்ந்த அரசியல்வாதியாக இந்த ஜென்மத்தில் நீ வரமுடியாது. அடுத்த ஜென்மத்தில் இத்தாலியில் முயன்றுபார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X