பொது செய்தி

இந்தியா

ஒரு அடி நிலத்தை கூட விட மாட்டோம்: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் திட்டவட்டம்

Updated : அக் 27, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: ''சீனாவுடன் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் தணிந்து, அமைதி ஏற்படவே விரும்புகிறோம். அதே நேரத்தில், நம் எல்லையில், 1 அடி நிலத்தைக் கூட, விட்டுத் தர மாட்டோம்,'' என, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார்.ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒவ்வொரு ஆண்டும், ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடுவார். ஆயுத
ராணுவ அமைச்சர், ராஜ்நாத், திட்டவட்டம்

புதுடில்லி: ''சீனாவுடன் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் தணிந்து, அமைதி ஏற்படவே விரும்புகிறோம். அதே நேரத்தில், நம் எல்லையில், 1 அடி நிலத்தைக் கூட, விட்டுத் தர மாட்டோம்,'' என, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒவ்வொரு ஆண்டும், ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடுவார்.


ஆயுத பூஜை



இந்தாண்டு, சீன எல்லையை ஒட்டிய, நம் சிக்கிம் மாநிலத்தின் ஷேராதங்க் பகுதியில் உள்ள படைப் பிரிவினருடன், ஆயுத பூஜையை கொண்டாட, அவர் திட்டமிட்டிருந்தார்.மோசமான வானிலை காரணமாக, அங்கு செல்வதைக் கைவிட்டு, மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தின் சுக்னாவில் உள்ள, 33வது ராணுவப் படைப் பிரிவில், ஆயுத பூஜையை, வீரர்களுடன் கொண்டாடினார்.

'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், சிக்கிமில் புதிய சாலை திட்டத்தையும் அவர் துவக்கி வைத்தார். ராணுவ தளபதி எம்.எம்.நரவானே உள்ளிட்ட உயரதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.பூஜை செய்த பின், ராஜ்நாத் சிங் பேசியதாவது:சீனாவுடன் எல்லையில் நடந்து வரும் பிரச்னை, முடிவுக்கு வர வேண்டும் என்பதே, இந்தியாவின் விருப்பம்.


பிரச்னை



எல்லையில் அமைதி திரும்ப விரும்புகிறோம். ஆனால், அங்கு அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. நம் வீரர்களின் வீரம் மற்றும் திறமையின் மீது முழு நம்பிக்கை உள்ளது. நாட்டின், 1 அடி நிலத்தைக் கூட மற்றவர்கள் அபகரித்துச் செல்ல, நம் வீரர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.லடாக் எல்லையில் சமீபத்தில் நடந்த சம்பவங்களில், நம் வீரர்களின் வீர தீரச் செயல்பாடுகள், நாட்டின் வரலாற்றில் பொன்னெழுத்தால் எழுதப்பட வேண்டியவை. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raj -  ( Posted via: Dinamalar Android App )
26-அக்-202021:24:47 IST Report Abuse
raj நீ செய்ததை தான் பார்தோமே
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-அக்-202005:01:55 IST Report Abuse
J.V. Iyer சுய மரியாதையும், முதுகெலும்பும் உள்ளது இந்த மத்திய அரசு, பாஜக அரசு.. காங்கிரஸ் போன்று எல்லையில் சீனாவிடம் எல்லாவற்றையும், இழந்து நிற்கவில்லை, மறைக்கவில்லை. இதன் வழித்தோன்றல் ராகுல்ஜீ அடிக்கும் கூத்து இருக்கிறதே அப்பப்பா
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
26-அக்-202004:18:57 IST Report Abuse
blocked user குளிர் காலம் வந்துவிட்டது. 60 களில் விட்டதை பிடிப்பது அவசியம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X