பொது செய்தி

இந்தியா

எல்லை காக்கும் வீரர்களுக்கு விளக்கேற்றுங்கள்: 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

Updated : அக் 27, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (8+ 12)
Share
Advertisement
புதுடில்லி: ''பண்டிகை காலத்தில், உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பொருட்களை மக்கள் வாங்க வேண்டும். எல்லை யில் துணிச்சலுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நம் வீரர்களை பெருமைப்படுத்தும் வகையில், பண்டிகை நாட்களில், வீடுகளில் விளக்கேற்ற வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில்,
எல்லை,வீரர்,விளக்கேற்றுங்கள், மன் கி பாத், நிகழ்ச்சி, பிரதமர்மோடி,

புதுடில்லி: ''பண்டிகை காலத்தில், உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பொருட்களை மக்கள் வாங்க வேண்டும். எல்லை யில் துணிச்சலுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நம் வீரர்களை பெருமைப்படுத்தும் வகையில், பண்டிகை நாட்களில், வீடுகளில் விளக்கேற்ற வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில், 'மன் கி பாத்' நிகழ்ச்சி வழியாக, நாட்டு மக்களிடம், பிரதமர் மோடி பேசி வருகிறார்.


முக கவசம்அக்டோபர் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசிய தாவது:நாடு முழுதும், தசரா பண்டிகை கொண்டாடி வருகிறோம். இந்த புனிதமான நாளில், அனைத்து மக்களுக்கும் தசரா பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.தீமையை நன்மை வென்றதையும், பொய்மையை உண்மை வென்றதையும் தெரிவிப்பது தான் தசரா விழா. பல்வேறு பிரச்னைகள், சிக்கல்களுக்கு மத்தியில், நாம் பொறுமையாக இருந்ததன் வெற்றியையும், தசரா குறிக்கிறது.

இப்போது, அனைத்து மக்களும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வாழ்கின்றனர். மிக எளிமையாக பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். கொரோனா வைரசுக்கு எதிரான போரில், நாம் வெற்றி பெறுவது உறுதி. ஈத், வால்மீகி ஜெயந்தி, தீபாவளி, சாத் பூஜை, குருநானக் ஜெயந்தி உட்பட பல பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளன.

கொரோனா விழிப்புணர்வு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, மக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன், பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும். பண்டிகை காலங்களில், புதிய பொருட்களை மக்கள் உற்சாகமாக வாங்குவர். இந்த முறை, கடைகளுக்குச் செல்லும் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து வாங்க வேண்டும். நம் காதிப் பொருட்கள், உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ளன. கொரோனா பரவல் காலத்தில், காதியில் தயாரிக்கப்பட்ட முக கவசங்கள் அதிகளவில் விற்பனையாகின.

கொரோனா காலத்தில், நம் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்த நேரத்தில், நமக்குத் துணையாக இருந்தவர்களை, பண்டிகை நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.துாய்மை பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், வீட்டுக் காவலர்கள், வீட்டுப் பணியாளர்கள் ஆகியோர், கொரோனா காலத்தில் நமக்கு ஏராள மான உதவிகளைச் செய்தனர். அவர்களுடன் சேர்ந்து, பண்டிகைகளை கொண்டாட வேண்டும்.

எல்லையில் துணிச்சலுடன் காவல் காக்கும் வீரர்களை, இந்தப் பண்டிகை காலத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும்.பண்டிகை காலங்களில், ராணுவ வீரர்கள் எல்லையில் இருந்தாலும், ஒட்டுமொத்த தேசமும், உங்களுடன் இருக்கிறது; உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறது என, அவர்களுக்கு நாம் தெரியப்படுத்த வேண்டும்.


வழிபாடு

நம் ஆன்மிகம், யோகா, ஆயுர்வேதம் ஆகியவை உலகை கவர்ந்துள்ளன. தமிழகத்தின் வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர விளையாட்டான, 'மல்கம்ப்' விளையாட்டு, பல நாடுகளில் பிரபலமாகி வருகிறது.புனித பயணங்களே, பாரதத்தை ஒருங்கிணைக்கிறது. சக்தி பீடங்களும், வைணவ தலங்களும், ஜோதிர்லிங்கங்களும், பாரத நாட்டை ஒரு மாலையாக, ஓரிழையில் இணைக்கின்றன. ஆதி சங்கரர், நாட்டின் நான்கு திசைகளுக்கும் பயணித்து, மகத்துவம் வாய்ந்த நான்கு மடங்களை நிறுவி, அவற்றை மேன்மையடைய செய்தார்.

பக்தி மற்றும் வழிபாடு மூலம், நாட்டை ஒன்றுபடுத்தியவர், அவர்.மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்கள் வாயிலாக, நாடு முழுதும் உள்ள விவசாயிகள் பயனடைகின்றனர். மக்காச்சோள விவசாயிகளுக்கு, தங்களுடைய விலையை தவிர, 'போனஸ்' தொகை கிடைக்கிறது. விவசாயிகள் தொழில்நுட்பம் மூலம், புதிய வியாபார வாய்ப்புகளை உருவாக்கலாம்.இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.


சலுான் கடை உரிமையாளருடன்பிரதமர் மோடி தமிழில் பேச்சுதமிழகத்தின் துாத்துக்குடியில், முடி திருத்தும் நிலையம் நடத்தி வரும், பொன் மாரியப்பன், கடையின் ஒரு பகுதியில் நுாலகம் அமைத்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, நேற்றைய, 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து பொன் மாரியப்பனிடம், பிரதமர் மோடி, தமிழில் பேசினார். அப்போது நடந்த உரையாடல்:

பிரதமர்: வணக்கம் மாரியப்பன்... நல்லா இருக்கீங்களா?

மாரியப்பன்: நலமாக உள்ளேன்.

பிரதமர்: இந்த நுாலகம் அமைக்கும் எண்ணம் எப்படி வந்தது?

மாரியப்பன்: நான், எட்டாம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன்; அதற்கு மேல் படிக்க முடியவில்லை. படித்தவர்களை பார்க்கும் போது, ஏக்கம் இருந்தது. இதனால், நுாலகம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என நினைத்து, இந்த முயற்சியில் ஈடுபட்டேன்.

பிரதமர்: உங்களுக்கு எந்த புத்தகம் பிடிக்கும்? க்ஷ

மாரியப்பன்: எனக்கு திருக்குறள் பிடிக்கும்.

பிரதமர்: நல்வாழ்த்துகள்.

மாரியப்பன்: பிரதமரிடம் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு, உரையாடல் நடந்தது.

Advertisement
வாசகர் கருத்து (8+ 12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-அக்-202023:15:50 IST Report Abuse
தமிழவேல் இதுக்கு, சீனா பொருட்களை வாங்காதீர்கள் என்று நேரடியா சாரத்துக்கு எது உதைக்குது ?🤔🤔🤔
Rate this:
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
27-அக்-202012:05:48 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலைசொல்லமாட்டாரு, அப்புறம் எப்படி கல்லா கட்டறது....
Rate this:
Cancel
26-அக்-202018:05:17 IST Report Abuse
ஆப்பு உள்ளூர் தயாரிப்புகளை மட்டும் வாங்கணும். தமிழர்கள் தமிழக தயாரிப்புகளை மட்டும் வாங்கணும். மாவட்ட மக்கள் அந்த மாவட்ட பொருளை மட்டும் வாங்கணும். இப்பிடியே ஒவ்வொரு குடும்பமும் அவிங்களுக்குள்ளேயே வியாபாரம் செஞ்சுக்கணும். இதுதான் 100 சதவீதம் ஆத்ம நிர்பரா.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
26-அக்-202017:36:16 IST Report Abuse
konanki தூத்துக்குடி எம்பி க்கு இவர் செய்யும் நற்பணி ஏன் தெரியவில்லை? ஒ ஓட்டு வங்கி ...அரசியல் செய்ய மட்டுமே தெரிந்த திராவிஷத் தலைவர் அல்லவா அவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X