பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல்லை புறக்கணிக்கும் அதிவேக ரயில்

Added : அக் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
நாமக்கல்; சென்னை - மதுரை மார்க்கத்தில் இயக்கப்படும் குளிரூட்டப்பட்ட அதிவேக ரயில், நாமக்கல்லில் நிற்காமல் செல்வதால், பயணியர் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.நாமக்கல் - கரூர் மாவட்ட மக்களின், நீண்ட நாள் கோரிக்கையான, சேலம் - கரூர் அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டு, ரயில் போக்கு வரத்து துவங்கப்பட்டுள்ளது.இவ்வழியாக, சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத் போன்ற ஊர்களுக்கு

நாமக்கல்; சென்னை - மதுரை மார்க்கத்தில் இயக்கப்படும் குளிரூட்டப்பட்ட அதிவேக ரயில், நாமக்கல்லில் நிற்காமல் செல்வதால், பயணியர் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.

நாமக்கல் - கரூர் மாவட்ட மக்களின், நீண்ட நாள் கோரிக்கையான, சேலம் - கரூர் அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டு, ரயில் போக்கு வரத்து துவங்கப்பட்டுள்ளது.இவ்வழியாக, சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத் போன்ற ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா பரவலை தொடர்ந்து, நாடு முழுதும், மார்ச் முதல், ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

தற்போது, கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம்- - நாமக்கல் - கரூர் ரயில் பாதையில், கடந்த திங்கள் முதல், சென்னை - -மதுரை முற்றிலும் குளிரூட்டப்பட்ட அதிவேக விரைவு வண்டி, வாரத்துக்கு, மூன்று முறை இயக்கப்படுகிறது.இந்த ரயில், மாவட்ட தலைநகரமான, நாமக்கல்லில் நிற்காமல் செல்கிறது.

தற்போது, நாமக்கல்லில் இருந்து சென்னை செல்ல, எந்த ரயிலும் இல்லாததால், இந்த ரயில் நாமக்கல்லில் நிற்கும்பட்சத்தில், நாமக்கல் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.'இந்த ரயில், நாமக்கல்லில் நின்று செல்ல, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
26-அக்-202016:16:20 IST Report Abuse
Loganathan Kuttuva இந்த ரயில் நடு இரவில் நாமக்கல்லை கடந்து செல்லும்.கட்டணம் அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X