பொது செய்தி

தமிழ்நாடு

விறகாக விற்கப்படும் கைத்தறிகள்: சென்னிமலை நெசவாளர்கள் கண்ணீர்

Added : அக் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னிமலை; கைத்தறி கேந்திரமாக விளங்கிய சென்னிமலையில், அடுப்புக்கு விறகாக கைத்தறிகளை பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், சென்னிமலை, கைத்தறி நெசவு தொழிலுக்கு புகழ் பெற்றது. இந்திய விடுதலைக்கு முன்பே, இங்கு கைத்தறியில் நெசவு செய்த போர்வை, சேலை ரகங்கள் இலங்கை, சிங்கப்பூர் நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளன.இதனால், தனியார் கைத்தறி துணி உற்பத்தி முதலாளிகள்
 விறகாக விற்கப்படும் கைத்தறிகள்: சென்னிமலை நெசவாளர்கள் கண்ணீர்

சென்னிமலை; கைத்தறி கேந்திரமாக விளங்கிய சென்னிமலையில், அடுப்புக்கு விறகாக கைத்தறிகளை பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை, கைத்தறி நெசவு தொழிலுக்கு புகழ் பெற்றது. இந்திய விடுதலைக்கு முன்பே, இங்கு கைத்தறியில் நெசவு செய்த போர்வை, சேலை ரகங்கள் இலங்கை, சிங்கப்பூர் நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளன.இதனால், தனியார் கைத்தறி துணி உற்பத்தி முதலாளிகள் அதிகம் இருந்தனர். அவர்களிடம், குறைந்த கூலிக்கு நெசவு செய்தவர்களை மீட்க, ௧941ம் ஆண்டிலேயே, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

30 சதவீதம்சென்னிமலை கைத்தறி போர்வை, தீரைச்சீலை, வீட்டு உபயோக துணிகள், பல நாடுகளுக்கும் ஏற்றுமதியானது. ஜெர்மன் நாட்டின் பிராங்பர்ட் நகரில் நடந்த துணிகள் கண்காட்சிக்கு, இப்பகுதி கைத்தறி நெசவாளர்கள் சென்று வந்துள்ளனர். இவ்வளவு சிறப்பாக செயல்பட்ட கைத்தறி துணி உற்பத்தி, தனியார்களிடம் இருந்து, கைத்தறி கூட்டுறவு சங்கத்துக்குள் தற்போது அடங்கியுள்ளது. சென்னிமலை வட்டாரத்தில் மட்டும், 48 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன.இதனால், தனியார் அனைவரும், விசைத்தறிக்கு மாறி, போர்வை, படுக்கை விரிப்புகளை குறைந்த விலைக்கு தயாரித்து, விற்பனைக்கு கொண்டு வந்ததால், கைத்தறி துணி விற்பனை சரிய துவங்கியது.

அரசும், கைத்தறி துணிகளை விற்பனை செய்ய, 30 சதவீதம் தள்ளுபடி மானியம் கொடுத்தது. ரக கட்டுப்பாடு சட்டமும் கொண்டு வந்தது. ஆனாலும், எதுவும் எடுபடவில்லை.விலை குறைவு, கண் கவர் டிசைன் என, கைத்தறி துணி போலவே, விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் மீது, மக்களின் ரசனை திரும்பியது. கைத்தறி துணி விற்பனை தடுமாற துவங்கியது.அழிவின் விளிம்புதற்போது, அரசின் திட்டங்களை நம்பியே, கைத்தறி நெசவாளர் வாழ்க்கை அமைந்து விட்டது. ஒருநாளில், 12 மணி நேரம் உழைத்தாலும், 400 ரூபாய் கூலியே கிடைப்பதால், கைத்தறி நெசவுத் தொழிலை கற்றுக்கொள்ள, இளைய தலைமுறையினர் முன் வரவில்லை. சென்னிமலையில், தற்போது கைத்தறி நெசவு நெய்யும் அனைவரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான். இவர்களும் குறைந்து வரும் நிலையில், கைத்தறி நெசவு தொழில் அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளது.

தொழிலை கைவிட்ட ஒரு சிலர், கைத்தறிகளை விற்க துவங்கி விட்டனர். மர அறுவை மில் உரிமையாளர்கள் வாங்கிச்சென்று, விறகு அடுப்புகளுக்கு ஏற்ற வகையில் பிரித்தும், அறுத்தும், விறகாக விற்பனை செய்கின்றனர். அடுப்புக்கு போகும் கைத்தறியின் பெருமையை உணர்ந்த பலர், அவற்றை விறகாக பார்க்கும் போதெல்லாம் கண்ணீர் வடிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
26-அக்-202016:19:17 IST Report Abuse
Loganathan Kuttuva சிலர் இந்த கைத்தறி நெசவை மின் மோட்டாரை பொருத்தி இயக்குகிறார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X