பொது செய்தி

இந்தியா

சீனாவுடன் போர் : உ.பி.,யில் பா.ஜ., தலைவர் பேச்சால் சர்ச்சை

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
பல்லியா : நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் போரிட பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக உ.பி. மாநில பா.ஜ. தலைவர் ஸ்வதந்திரதேவ் சிங் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில பா.ஜ. தலைவர் ஸ்வதந்திரதேவ் சிங்கின் சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய 'வீடியோ' சமூக
சீனா, எல்லை, பிரதமர், உத்திரப் பி்ரதேசம், போரிட, முடிவு, காஷ்மீர், பிரிவு, ரத்து


பல்லியா : நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் போரிட பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக உ.பி. மாநில பா.ஜ. தலைவர் ஸ்வதந்திரதேவ் சிங் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில பா.ஜ. தலைவர் ஸ்வதந்திரதேவ் சிங்கின் சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியுள்ளதாவது: ராமர் கோவில் கட்டுமான பணிகளை துவங்கியது மற்றும் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவை ரத்து செய்தது போலவே எல்லை பிரச்னையில் நம்முடன் தகராறு செய்யும் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் எப்போது போரிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். அதற்கான தேதியையும் அவர் தீர்மானித்து உள்ளார். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


latest tamil news



அவரது இந்த பேச்சு உ.பி. மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உ.பி.யின் சலேம்பூர் லோக்சபா தொகுதி பா.ஜ. - எம்.பி. ரவீந்திர குஷ்வாஹா ''கட்சி தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஸ்வதந்திரதேவ் சிங் இதுபோல் பேசியுள்ளார்'' என கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
26-அக்-202017:35:43 IST Report Abuse
Endrum Indian இதைத்தான் கருத்து பகுதியில் ஒருவர் சொல்லி விட்டாரே 2021 ல் இந்திய சீனா சண்டை என்று
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
26-அக்-202010:16:34 IST Report Abuse
Appan இந்திய பேச்சு சுதந்திரம் உள்ள நாடு.. இப்படி பேசுவதால் நன்மைகளும், தீமைகளும் உண்டு..இப்போ இவர் இப்படி பேசியதால் சீன கொஞ்சம் ஷாக் அகி இருக்கும்..ஏனென்றால் சீனாவில் இப்படி யாரும் மனம் போனபடி பேசமுடியாது..இப்போ சீன இந்தியாவின் உண்மை எண்ணம் என்று ஆராய்ச்சியில் இறங்கி இருக்கும்..மறுபடியும் இன்னொரு இந்தியர் எதாவது சொல்லுவார். அப்போ சீன திணறும்..ஏனென்றால் சீனாவில் கருத்து சுதந்திரம் இல்லை..இதனாலேயே அவர்கள் திண்டாடுவார்கள்..இந்திய சீனாவுடன் சண்டை செய்ய தேவை இல்லை..இப்படி ஊடகங்கள். அரசியல் தலைவர்கள் பேசினாலே அவர்கள் கதிகலங்கி போய்விடுவார்கள்.. லடாக் பள்ளத்தாக்கு சண்டையில் இந்தியர்கள் 20 பேர் மாண்டார்கள்..ஆனால் சீனர்கள் எவ்வளவு பேர் செத்தார்கள் என்று அவர்கள் சொல்லவில்லை.. இந்திய ஊடகங்கள் இதை வைத்து சீனாவை சும்மா வெளுத்தி வாங்கிவிட்டார்கள்..கதிகலங்கி சீனர்கள் இந்தியாவுடன் முதலில் கேட்டது , இப்படி ஊடகங்கள் செய்தி போடக்கூடாது என்று கேட்டார்கள்..ஆனால் இந்திய மக்களாட்சி நாடு..பாகிஸ்தானும் கராய்ச்சியில் போலிஸ்காரனை கடத்தியதை இந்திய ஊடகங்கள் புரட்சி அது இது என்று கண்ணா பின்ன என்று எழுதி விட்டார்கள்..அவர்களும் ஆடி விட்டார்கள்..இது தான் SoftWAR ..இந்திய இதை சரியாக செய்யணும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X