செய்தி நிறுவனத்தை முடக்கிய ரேன்சம்வேர் வைரஸ்| Dinamalar

செய்தி நிறுவனத்தை முடக்கிய 'ரேன்சம்வேர் வைரஸ்'

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | |
புதுடில்லி : வைரஸ் தாக்குதலால் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் சேவைகள் பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. தொழில்நுட்ப நிபுணர்கள் போராடி தகவல்களை மீட்டுள்ளனர்.இந்தியாவின் மிகப் பெரிய செய்தி நிறுவனமான பி.டி.ஐ. வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: 'ரேன்சம்வேர் வைரஸ்' எனப்படும் இணையத் திருடர்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் 'கம்ப்யூட்டர் சர்வர்' எனப்படும் தகவல்
PTI, ransomware attack, servers

புதுடில்லி : வைரஸ் தாக்குதலால் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் சேவைகள் பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. தொழில்நுட்ப நிபுணர்கள் போராடி தகவல்களை மீட்டுள்ளனர்.

இந்தியாவின் மிகப் பெரிய செய்தி நிறுவனமான பி.டி.ஐ. வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: 'ரேன்சம்வேர் வைரஸ்' எனப்படும் இணையத் திருடர்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் 'கம்ப்யூட்டர் சர்வர்' எனப்படும் தகவல் தொகுப்பு இயந்திரத்துக்குள் நுழைந்து சேவைகளை முடக்குவர்.ரேன்சம் எனப்படும் பிணைத் தொகை கேட்டு மிரட்டுவர்.


latest tamil news



அவ்வாறு பி.டி.ஐ.யின் சர்வருக்குள் நுழைந்து நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு முடக்கினர். இதனால் பல்வேறு பத்திரிகைகள் ஊடகங்களுக்கு செய்தி பகிர்ந்து கொள்ளும் சேவை பாதிக்கப்பட்டது. நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் கடுமையாக போராடி நேற்று காலை 9:00 மணியளவில் முழுமையாக மீட்டனர். இதற்காக எந்த பிணைத் தொகையும் தரப்படவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X