ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., கருத்து வேறுபாடு| Dinamalar

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., கருத்து வேறுபாடு

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (5) | |
புதுடில்லி: பா.ஜ.,வுக்கு ஆலோசனைகளை வழங்கி, கட்சியை பின் நின்று நடத்துவது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு. இதன் அனைத்து ஆலோசனைகளையும் பிரதமர் மோடி, கவனத்துடன் கேட்டாலும், சில விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். இதனால், சமீப காலமாக, பா.ஜ.,வுக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும், பல விஷயங்களில் மோதல் நடந்து வருகிறது.'மஹாராஷ்டிராவில், சிவசேனாவை, காங்கிரஸ் கூட்டணி பக்கம் போக

புதுடில்லி: பா.ஜ.,வுக்கு ஆலோசனைகளை வழங்கி, கட்சியை பின் நின்று நடத்துவது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு. இதன் அனைத்து ஆலோசனைகளையும் பிரதமர் மோடி, கவனத்துடன் கேட்டாலும், சில விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். இதனால், சமீப காலமாக, பா.ஜ.,வுக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும், பல விஷயங்களில் மோதல் நடந்து வருகிறது.



latest tamil news


'மஹாராஷ்டிராவில், சிவசேனாவை, காங்கிரஸ் கூட்டணி பக்கம் போக விட்டது மிகப்பெரிய தவறு' என, ஆர்.எஸ்.எஸ்., தொடர்ந்து கூறி வருகிறது. மாநிலத்தில் உள்ள கோவில்களை திறப்பது குறித்து சமீபத்தில் மஹாராஷ்டிரா கவர்னர் கோஷியாரி, முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு ஒரு கடுமையான கடிதம் எழுதினார்.இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'கவர்னர், இப்படி கடிதம் எழுதியிருக்கக் கூடாது' என, 'பளிச்' என கூறி விட்டார். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர், கவர்னர் கோஷியாரி. இவர், 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் கடுமையாக உழைத்தவர்.'அவருக்கு எதிராக அமித் ஷா பேசியிருக்க வேண்டாம்' என சீனியர் தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி கருதுகின்றனராம்.


latest tamil news


இந்த இரண்டு தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்துக்கு நெருக்கம். 'கவர்னருக்கு எதிராக அமித் ஷா பேசியதிலும் ஒரு காரணம் உள்ளது; இது உத்தவ் தாக்கரேவை குஷிப்படுத்தும். காங்கிரசோடு மோதல் ஏற்பட்டால், சிவசேனா மீண்டும், பா.ஜ., பக்கம் வர வாய்ப்புள்ளது. இந்த நோக்கத்தில் தான் அமித் ஷா பேசியுள்ளார்' என்கின்றனர், பா.ஜ., பிரமுகர்கள்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X