அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல் சுயநலனுக்காக அவதூறு பேச்சு: அண்ணாமலை கண்டனம்

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : ''அரசியல் சுயநலத்திற்காக இந்து மக்களையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தி சிலர் பேசி வருகின்றனர்,'' என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் அண்ணாமலை கூறினார்.கோவை காரமடையில் பா.ஜ., நிகழ்ச்சியில், அண்ணாமலை பேசியதாவது:கடந்த, 53 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்துள்ளன. ஏழைகள் இன்னும் ஏழையாகவே உள்ளனர். மத்திய பா.ஜ., அரசு, வீடு இல்லாதவர்களுக்கு, 2.77
BJP, Annamalai, Thol Thirumavalavan

மேட்டுப்பாளையம் : ''அரசியல் சுயநலத்திற்காக இந்து மக்களையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தி சிலர் பேசி வருகின்றனர்,'' என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவை காரமடையில் பா.ஜ., நிகழ்ச்சியில், அண்ணாமலை பேசியதாவது:கடந்த, 53 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்துள்ளன. ஏழைகள் இன்னும் ஏழையாகவே உள்ளனர். மத்திய பா.ஜ., அரசு, வீடு இல்லாதவர்களுக்கு, 2.77 லட்சம் ரூபாயில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம், உட்பட, 17 சலுகைகளை வழங்கியுள்ளது. இதனால் ஏழையாக இருந்தவர், நடுத்தர மக்களாக உயர்ந்துள்ளார். நடுத்தர வர்க்கத்தினர் தொழில் துவங்க, மத்திய அரசு கடன் வசதி செய்து கொடுத்துள்ளது.


latest tamil news


பிரதமர் மோடி அறிவிக்கும் திட்டங்களில் ஊழல் எதுவும் நடப்பதில்லை. திராவிட கட்சிகள், குடும்ப அரசியலையும், குறுநில மன்னர்களையும் உருவாக்கியுள்ளது. நேர்மை, சுயமரியாதை, தேசியம், ஆன்மிகம் கலந்த பாதையை பா.ஜ., உருவாக்கியுள்ளது.

தி.மு.க., கூட்டணியில் உள்ள திருமாவளவன், இந்து பெண்கள், இந்து தர்மம் குறித்து அவதுாறாக பேசியுள்ளார். அரசியல் சுயநலத்திற்காக இவ்வாறு இந்துக்களையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தி பேசுகின்றனர். வரும் தேர்தலில் இவர்களை புறக்கணிக்க வேண்டும். சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., பெரிய அளவில் போட்டியிட உள்ளது. இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
26-அக்-202020:27:56 IST Report Abuse
தமிழ்வேள் இந்த மத துவேஷிகளை இந்தோ திபெத் பார்டர் போலீஸ் அல்லது மத்திய ரிசர்வ் போலீஸ் வசம் ஒப்படைக்க வேண்டும் ..ரெட் சேம்பரில் வைத்து அவர்கள் தரும் ஸ்பெஷல் டிரீட்மெண்டாய் பொது ஒளிபரப்பு செய்யவேணும் ...மத துவேஷிகள் படும் நரக வேதனை , சித்த்ரவதையை கண்டு பிறகு எவனும் மத துவேஷம் பேசக்கூடாது [சிந்தனை கூட செய்யக்கூடாது ] ரெட் செம்பரிலிருந்து வெளியே வருபவன் நடைப்பிணமாக வாழ்வில் பின்பு எதற்கும் லாயக்கற்றவனாக வெளிவரவேண்டும் ..........
Rate this:
M.Selvam - Chennai/India,இந்தியா
27-அக்-202010:47:58 IST Report Abuse
M.Selvamஉங்கள் வக்கிர புத்தியை இப்பிடியா வெளிப்படையா சொல்வது..?...
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
26-அக்-202017:09:10 IST Report Abuse
konanki தமிழகத்தில் சிறுபான்மை யினர் ஓட்டு வங்கி மிகுந்த பலத்துடன் உள்ளது. வழி பாட்டு தலங்களில் பிரார்த்தனை முடிந்த பின் இந்த கட்சிக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்று மத குருமார்கள் முடிவு செய்து அறிவிப்பு செய்வது முழுமையாக பின் பற்ற படுகிறது. அதனால் கட்சிகள் அவர்களுக்கு பயந்து எல்லா சலுகை களையும் குடுக்கிறார்கள். பெரும்பான்மை சமூகம் ஓரு ஓட்டு வங்கியாக மாறினால் தான் ஹிந்துக்கள் மேல் நடத்தப்படும் இம்மாதிரியான தாக்குதல்கள் நிற்கும்.
Rate this:
Cancel
Kamal - Lucknow,இந்தியா
26-அக்-202016:13:30 IST Report Abuse
Kamal Why can't BJP MP's to move a motion to impeach Thirumavalavan for his Dirty speech against Hindu women. This will teach us a lesson to ethicist who spoke against the Hindus. Also the state team of BJP, Delhi should receive very warm welcome on Delhi roads before reaching the parliament
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X