ஓ.பி.சி., இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி., மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று (அக்.26) தீர்ப்பு வழங்குகிறது.தமிழகத்திலிருந்து மத்திய அரசின் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 சதவீதம் ஓ.பி.சி., மாணவர்களுக்கான ஒதுக்கீட்டை நடப்பாண்டே உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் தி.மு.க., உள்ளிட்ட

புதுடில்லி: மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி., மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று (அக்.26) தீர்ப்பு வழங்குகிறது.



latest tamil news


தமிழகத்திலிருந்து மத்திய அரசின் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 சதவீதம் ஓ.பி.சி., மாணவர்களுக்கான ஒதுக்கீட்டை நடப்பாண்டே உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இடஒதுக்கீடு தொடர்பான ஆலோசனை குழுவின் பரிந்துரை கிடைக்காத நிலையில், ஓபிசி மாணவர்களுக்கு குறைந்த பட்சம் 27 சதவீத இட ஒதுக்கீடாவது வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரவினருக்கு நடப்பாண்டில் இடஒதுக்கீடு கண்டிப்பாக வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியிருந்தது.


latest tamil news


இதயைடுத்து இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் ஓ.பி.சி., மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. அண்மையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
26-அக்-202012:40:11 IST Report Abuse
Subramaniyam Veeranathan இத்தனை வருட இடஒதுக்கீடு அமலாக்க முறையில் தற்போது வேலையியல் வகுப்பு வாரியாக அரசாங்க வேலையில் உள்ளவர்களின் புள்ளி விவரத்தை பார்த்தால் எவ்வளவு தரமாக இந்த சலுகையை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போய்சேர்த்திருக்கிறது என்பது தெளிவாகும்.
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
26-அக்-202012:16:54 IST Report Abuse
Elango இதில் பிஜபி நிலை என்ன? இந்து என்றால் "அவா"மட்டும் தானா ?? இனி இட ஒதுக்கீடு பெறுகிறவர்களை திட்ட முடியாது, "ஆவாளும்" 10 சதவீதம் பெருகிறார்கள் - கட் ஆப் வேறு மிகவும் குறைவு (sc/st விட குறைவு)
Rate this:
Cancel
ganapthy subramanian - San Francisco ,யூ.எஸ்.ஏ
26-அக்-202012:13:11 IST Report Abuse
ganapthy subramanian மருத்துவம் என்பது ஒரு அத்தியாவசியமானது. அதற்கு தகுதி வேண்டும் எனத்தான் நீட் ஏற்படுத்தப்பட்டது. இதிலும் ஒதுக்கீடு கேட்டு தகுதியற்ற மாணவர்களை சேர்த்து உயர்ந்ததொழிலை நாசம் செய்து தகுதியான மாணவர்களை சாதி அடிப்படையில் ஒதுக்குவது மிக்க ஆபத்தை ஏற்படுத்தும். நாட்டின் சுகாதாரத்துடன் விளையாடுவது அருவருக்கத்தக்கது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X