உண்மைக்குப் புறம்பானது என தீர்ப்பளிக்கப்பட்டது திருமாவுக்குத் தெரியுமா?| Dinamalar

'உண்மைக்குப் புறம்பானது' என தீர்ப்பளிக்கப்பட்டது திருமாவுக்குத் தெரியுமா?

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (85) | |
மனு ஸ்மிருதியை எழுதியது யார்? அதைப் பற்றித் தவறான தகவல்களைத் தருபவர்களிடம், அதற்கான வரலாற்று ஆவணங்கள் உள்ளதா?இந்தியாவில் எப்போது, எந்த காலகட்டத்தில் மனு நீதி கடைப்பிடிக்கப்பட்டது என்று, அவர்களால் சொல்ல முடியுமா?'மனுஸ்மிருதி'சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயரால், 1794ம் ஆண்டு, 'மனுஸ்மிருதி' என்று எழுதப்பட்டது.இஸ்லாமியர்கள் ஷரியத் முறையை பின்பற்ற
மனுஸ்மிருதி, உண்மைக்குப்புறம்பானது, தீர்ப்பு, திருமாவளவன்

மனு ஸ்மிருதியை எழுதியது யார்? அதைப் பற்றித் தவறான தகவல்களைத் தருபவர்களிடம், அதற்கான வரலாற்று ஆவணங்கள் உள்ளதா?இந்தியாவில் எப்போது, எந்த காலகட்டத்தில் மனு நீதி கடைப்பிடிக்கப்பட்டது என்று, அவர்களால் சொல்ல முடியுமா?


'மனுஸ்மிருதி'


சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயரால், 1794ம் ஆண்டு, 'மனுஸ்மிருதி' என்று எழுதப்பட்டது.இஸ்லாமியர்கள் ஷரியத் முறையை பின்பற்ற வேண்டும் என்றும், 'இஸ்லாமிய மற்றும் ஹிந்து சட்ட விதிகளை, பல நுாற்றாண்டுகளாக இந்தியாவில் இருந்த நெறிமுறைகளை, சமய மற்றும் சமூக கட்டமைப்புகளை, தங்களின் ஐரோப்பிய முறைப்படியான கருத்துக்களோடு திணித்து மாற்றியமைத்தது அன்றைய ஆங்கிலேயே நிர்வாகம்' என்று, அப்துல்லா அகமது அன்-நைம் என்ற இஸ்லாமிய அறிஞர் குறிப்பிட்டுள்ளது, பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை!

தற்போது திருமாவளவன் கூறிய கருத்துக்கள் அடங்கிய மனு தர்ம நுால், 1887ம் ஆண்டு, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தால், 'உண்மைக்கு புறம்பானது' என்று தீர்ப்பு சொல்லப்பட்டது, அவர் அறிந்துள்ளாரா என்பது தெரியவில்லை.அப்படி அவருக்குத் தெரியுமென்றால், அவர் மேற்கோள் காட்டிய மனு தர்ம நுால், ஆங்கிலேயர்களால் புகுத்தப்பட்டது என்ற அடிப்படையில், ஹிந்து மதத்திற்கும், அதற்கும், எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்படுகிற நிலையில், மதங்களுக்கிடையே வெறுப்பை துாண்டி விட்டு, மதக்கலவரத்தை தமிழகத்தில் உருவாக்க முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டு மேலும் வலுவடைகிறது.


latest tamil newsகிட்டத்தட்ட, 50க்கும் மேற்பட்ட மனுஸ்மிருதி பதிப்புகள் உள்ள நிலையில், இவற்றில் பெரும்பாலானவை, அந்நியர்களால் எழுதப்பட்டவை.சமீபத்திய திருமாவளவனின் பேச்சு கூட, தொடர்ந்து ஹிந்து கடவுள்களையும், இந்தியாவையும், ஹிந்துக்களையும் அவதுாறாக, ஆபாசமாக சித்தரிக்கும், அமெரிக்காவின் வெண்டி டோனிகரின் புத்தகத்திலிருந்தே சொல்லப்பட்டது என்பதையும், அவர் ஏற்றுக் கொள்கிற நிலையில், சில நுாற்றாண்டுகளாக இந்தியகலாசாரத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் அந்நிய நாடுகளின் சதிக்கு துணை போகிறார்என்று தான் பொருள்!


மதவாத அரசியல்


ஹிந்துக்கள் ஏற்காத, ஹிந்துக்களால் பின்பற்றப்படாத விஷயங்களை மேற்கோள் காட்டி, ஹிந்துக்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்தால், இஸ்லாமியர்கள் மீதும், கிறிஸ்துவர்கள் மீதும், ஹிந்துக்கள் எதிர்வினையாற்றுவர் என்ற எதிர்பார்ப்போடு, அவர் தவறான தகவலை அளிக்கிறார். அரசியல் உள்நோக்கத்திற்காக ஒட்டுமொத்த ஹிந்து பெண்களையும் அவதுாறாகப் பேசி அவமானப்படுத்துவது, மதவாத அரசியல் என்பதைத் தவிர, வேறல்ல!

அமைதிப் பூங்காவான தமிழகத்தில், மதங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தி கலவரங்களுக்கு வித்திட்டு, அரசியல் லாபமடைய பார்க்காமல், அந்நிய தீய சக்திகளுக்கு துணை போகாமல், பொறுப்பான லோக்சபா உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு, மாநில மற்றும் தேச நலனில் அவர் அக்கறை செலுத்த வேண்டும்; ஆக்கபூர்வ அரசியல் செய்ய வேண்டும்!
நாராயணன் திருப்பதி
செய்தி தொடர்பாளர் பா.ஜ.,
narayanant.bjp@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X