பொது செய்தி

இந்தியா

அமெரிக்க அமைச்சர்கள் டில்லி வந்தனர்

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவுகள் குறித்து பேச்சு நடத்த அமெரிக்க அமைச்சர்கள் இன்று(அக்.,26) டில்லி வந்தனர். அமெரிக்காவுடன் இந்தியா நல்லுறவு பல முயற்சிகளில் வலுத்து வருகிறது. குறிப்பாக அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி இடையில் இணக்கமான நட்புறவு நிலவுவது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அமைச்சர்கள் மைக்பாம்பியோ, மார்க் எஸ்பர்

புதுடில்லி: அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவுகள் குறித்து பேச்சு நடத்த அமெரிக்க அமைச்சர்கள் இன்று(அக்.,26) டில்லி வந்தனர்.



latest tamil news



அமெரிக்காவுடன் இந்தியா நல்லுறவு பல முயற்சிகளில் வலுத்து வருகிறது. குறிப்பாக அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி இடையில் இணக்கமான நட்புறவு நிலவுவது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அமைச்சர்கள் மைக்பாம்பியோ, மார்க் எஸ்பர் இன்று (அக்.,26) மாலை டில்லி வந்தனர். இருவரும் நாளை ( 27 ம் தேதி ) மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஜெயசங்கர் ஆகியோரை சந்திக்கின்றனர். இந்த சந்திப்பில் முக்கிய ஆலோசனை நடக்கிறது.


latest tamil news



இந்த பேச்சில் உலகளாவிய பிரச்னைகள், சீனாவின் எல்லை தொடர்பான விவகாரங்கள், மற்றும் அடிப்படை பரிமாற்ற நட்புறவு ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படுகிறது . அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
26-அக்-202022:53:59 IST Report Abuse
DARMHAR மைக் பாம்பியோ என்று கூறி இருப்பது தவறு . மைக் பம்ப்பேயோ என்பது தான் சரியான உச்சரிப்பு.
Rate this:
Cancel
Shantha Kumar - Chennai,இந்தியா
26-அக்-202016:11:13 IST Report Abuse
Shantha Kumar அமெரிக்காவை நம்பக்கூடாது என்பது கடந்த காலம், இப்போது அமெரிக்கா இந்தியாவை நம்ப வேண்டிய காலம்.
Rate this:
Cancel
26-அக்-202015:48:43 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு சீனாவுக்கு எதிராக நாம் அமெரிக்காவை உபயோகித்துக் கொள்ளவேண்டும் அதை மோடி நிச்சயம் செய்வார் கையாலாகாத காங்கிரஸ் ஆட்சியா நடக்கிறது செய்ய முடியாமல் போவதற்கு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X