பொது செய்தி

இந்தியா

ஓய்வு நேரத்தில், ஆரூடம், ஜோதிடம் படிக்கிறீர்களோ....

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக மக்கள் ஓட்டளித்து, ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப் போகின்றனர். அதே போல, 2024ல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், மோடி ஆட்சி அகற்றப்படும். அதற்கு முன், பீஹாரில், நிதிஷ் குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி.'ஓய்வு நேரத்தில், ஆரூடம், ஜோதிடம் படிக்கிறீர்களோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர்
அழகிரி, அன்பழகன், சரவணன், வாசன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக மக்கள் ஓட்டளித்து, ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப் போகின்றனர். அதே போல, 2024ல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், மோடி ஆட்சி அகற்றப்படும். அதற்கு முன், பீஹாரில், நிதிஷ் குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி
- தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி.


'ஓய்வு நேரத்தில், ஆரூடம், ஜோதிடம் படிக்கிறீர்களோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை.



தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்க, அ.தி.மு.க., அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதால், ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. தமிழர்களின் பாரம்பரியத்தை காக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
- அமைச்சர் அன்பழகன்.


'அப்படியா, சொல்லவே இல்லை...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேச்சு.



தமிழக மக்கள், மாணவர்கள் தெளிவாக உள்ளனர். இதில், அரசியல் செய்து தனக்கு ஏதாவது லாபம் கிடைக்குமா என ஸ்டாலின் குழப்பம் செய்து கொண்டு இருக்கிறார். அவரது குறிக்கோள், ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான். தமிழக மக்களைப் பற்றியும், மாணவர்களைப் பற்றியும் அவருக்கு கவலை இல்லை
- அமைச்சர் சண்முகம்.


'சட்டம் இயற்றிய நீங்கள், அதை அமல்படுத்தாமல் இருந்தால், எதிர்க்கட்சித் தலைவர் போராடத் தான் செய்வார்....' என, சொல்லத் தோன்றும் வகையில், சட்டத்துறை அமைச்சர் சண்முகம் பேட்டி.



பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றால், இலவசமாக கொரோனா தடுப்பு ஊசி போடப்படும் என, அக்கட்சி தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வரும் ஒரு திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க வேண்டுமே தவிர, அதை தேர்தல் வாக்குறுதியாக தருவது ஏற்புடையதல்ல
- டாக்டர் சரவணன்.


latest tamil news





'நல்ல வேளை... பிரியாணியை, 'ஓசி'யில் தின்னுப்புட்டு, கடையை துவம்சம் செய்யற வழக்கம் உள்ளவங்களைப் போல, கோவாக்சின் ஊசி தயாரிக்கும் நிறுவனத்தை அதகளம் செஞ்சு, ஊசிகளை, 'லவட்டி'ட்டு வந்து போடுறதா சொல்லலியே...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., மருத்துவ அணியின் மாநில நிர்வாகியும், எம்.எல்.ஏ.,வுமான, டாக்டர் சரவணன் அறிக்கை.



விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தொடர்ந்து ஹிந்து மதத்தையும், அதைப் பின்பற்றுவோரையும் இழிவுபடுத்தி பேசி வருகிறார். பிற மதங்கள் குறித்து, எந்த கருத்தும் கூறுவதில்லை. யாரையோ திருப்திப்படுத்தவே இவ்வாறு செயல்படுகிறார்
- ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன்.


'அப்பாவி மக்களை, மூளை சலவை செய்ய முயற்சிக்கிறார். எனினும் அவர்கள், அவர் சொல்வதை நம்புவதில்லை; வழக்கம் போலவே, தங்கள் மத நம்பிக்கையில் சிறப்பாக உள்ளனர்...' என, கூறத் தோன்றும் வகையில், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் அறிக்கை.



பிரதமர் மோடியின் ஒவ்வொரு வார்த்தையும், நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கிறது. இவற்றை அனைவரும் பின்பற்றி விழிப்புணர்வுடன், கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கையில், முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்
- த.மா.கா., தலைவர் வாசன்.


'உங்களுக்கு தெரிகிறது; எதிர்க்கட்சிகள், வாய்ப்பந்தல் போடுகிறார் என்கின்றனவே...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை.


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
26-அக்-202018:15:03 IST Report Abuse
Suppan உங்க கட்சி மாறன் கம்பெனியின் சுமங்கலி கேபில் வளம் பெற இலவச டீ வி கொடுத்ததை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் சரவணா? தங்கள் கட்சிப் பணத்திலிருந்தா கொடுத்தார்கள்?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
26-அக்-202016:19:04 IST Report Abuse
r.sundaram அப்பன் சேர்த்த சொத்து அனுபவிக்கிறான் என்று யாரும் சொல்லக்கூடாது பாருங்கள், தானும் ஏதாவது சேர்க்க வேண்டாமா?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
26-அக்-202016:17:05 IST Report Abuse
r.sundaram இதெல்லாம் நடந்தாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வராது, என்ன நான் சொல்வது அழகிரியாரே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X