பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் நில அபகரிப்பை தடுக்க பதிவுத்துறை திடீர் கிடுக்கிப்பிடி

Updated : அக் 27, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை: கோவில் நிலங்கள் அபகரிக்கப்படுவதை தடுக்க, 'சர்வே' எண்கள் அடிப்படையில், பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை, பதிவுத்துறை துவக்கியுள்ளது.தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், தனி நபர்களால் அபகரிக்கப்படுகின்றன. போலி ஆவணங்கள் தயாரித்து, வேறு பெயருக்கு பத்திரங்கள் பதிந்து, மோசடி நடக்கிறது. அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்பதில், அறநிலைய துறை
கோவில்_நிலம், அபகரிப்பு, பதிவுத்துறை, கிடுக்கிப்பிடி

சென்னை: கோவில் நிலங்கள் அபகரிக்கப்படுவதை தடுக்க, 'சர்வே' எண்கள் அடிப்படையில், பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை, பதிவுத்துறை துவக்கியுள்ளது.

தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், தனி நபர்களால் அபகரிக்கப்படுகின்றன. போலி ஆவணங்கள் தயாரித்து, வேறு பெயருக்கு பத்திரங்கள் பதிந்து, மோசடி நடக்கிறது. அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்பதில், அறநிலைய துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்கு, பிற துறைகளின் ஒத்துழைப்பு, குறைவாக இருப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அறநிலைய துறையின் நில மீட்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க, பதிவுத்துறை முன்வந்துள்ளது. இதற்காக, பத்திரப்பதிவில் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.


latest tamil news


குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில், திம்மையன்பேட்டை, காசி விஸ்வநாதன் மற்றும் வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 50 ஏக்கர் நிலம், சமீபத்தில் மீட்கப்பட்டது. தனியார் பெயரில் இருந்த பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, 'இந்த நிலம் தொடர்பான விற்பனையில் ஏமாற வேண்டாம்' என, அறநிலைய துறைஅறிவித்தது. இதற்கு ஒத்துழைப்பு தரும் வகையில், இதில் சம்பந்தப்பட்ட, சர்வே எண்களில், போலி ஆவணங்கள் ரத்து விபரத்தை, வில்லங்க சான்றில் சேர்க்க, மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் வாயிலாக, இதில் தொடர்புடைய நிலங்கள் விற்பனை பதிவு தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, பிற மாவட்டங்களிலும் பதிவுத்துறை ஒத்துழைத்தால், கோவில் நில மீட்பு பணிகள் வெற்றி பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengaraj - Madurai,இந்தியா
27-அக்-202016:16:20 IST Report Abuse
Rengaraj இதற்கென அறநிலையத்துறை இணையத்தளத்தில் இது சம்பந்தமான தங்கள் புகார்களை பதிவு செய்யும் வண்ணம் தகுந்த கட்டமைப்பை ஏற்படுத்தி மக்களை அல்லது தன்னார்வ தொண்டுநிறுவனங்களை கேட்டுக்கொள்ளலாம். வில்லங்க சான்றிதழ் எடுக்கும்போது தரும் பதிவுகளை இதில் பதிவேற்றுமாறு செய்தால் பத்திரப்பதிவு துறை சரிபார்க்க ஏதுவாக இருக்கும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முதல் அமைச்சருக்கோ அல்லது தலைமை செயலக உயர் செயலருக்கோ குறிப்பிட்ட கால இடைவெளியில் (காலாண்டு அல்லது அரையாண்டு ) அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிக்கலாம்.
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
27-அக்-202015:51:31 IST Report Abuse
Cheran Perumal கோவில் நிலங்களை அரசே ஆட்டயப்போடுவதையும் தடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
M.S. PERUMAL PILLAI - Nagercoil,இந்தியா
27-அக்-202015:33:04 IST Report Abuse
M.S. PERUMAL PILLAI ஒவ்வொரு ஊரிலும் ஹிந்து இளைஞர்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி கோவில் நிலங்களை கண்காணிக்க வேண்டும். வரும் தேர்தல் சமயத்தில் திராவிட கட்சிகளுக்கு ஒட்டு போடாமல் நாட்டின் வளர்ச்சியும், பாதுகாப்பும் முக்கியம் என என்னும் கட்சிக்கு ஒட்டு போடா வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X