அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் உடனே ஒப்புதல் தரவேண்டும்: பாஜ., கோரிக்கை

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு உடனே ஒப்புதல் தரவேண்டும் என தமிழக பாஜ., துணைத் தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் ஆகியோர் கவர்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறும், அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க, கடந்த மாதம் நடந்த சட்டசபை
உள்ஒதுக்கீடு, மசோதா, கவர்னர், மருத்துவப்படிப்பு, அரசுப்பள்ளி, பாஜக, அண்ணாமலை, ராகவன்

சென்னை: மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு உடனே ஒப்புதல் தரவேண்டும் என தமிழக பாஜ., துணைத் தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் ஆகியோர் கவர்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறும், அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க, கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில், மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம், கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை. அவர் சட்ட நிபுணர்களின் ஆலோசனையை கேட்டு உள்ளார். மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுங்கட்சி தரப்பிலும், திமுக தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.


latest tamil news



இந்நிலையில், தமிழக பாஜ., துணைத் தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் ஆகியோரும் கவர்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், ‛கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும், மாணவர்களின் மனதில் இருக்கும் நிச்சயமற்ற தன்மையை நீக்கவும் கவர்னரை கேட்டுக்கொள்கிறேன். இது மிக முக்கியமான ஒன்றாகும், மேலும் இதை தாமதப்படுத்த முடியாது,' எனப் பதிவிட்டார்.

பாஜ., பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் கூறுகையில், ‛7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் உடனே ஒப்புதல் தர வேண்டும். மருத்துவ படிப்பில் தேவையற்ற குழப்பத்தை தவிர்க்க கவர்னர் உடனே ஒப்புதல் தருவது அவசியம். முக்கியமான மசோதா என்பதால் மேலும் தாமதம் செய்யக்கூடாது,' எனக் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
27-அக்-202004:33:58 IST Report Abuse
Nepolian S எவனாவது ஒருத்தன் பேசுங்க
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
27-அக்-202001:33:51 IST Report Abuse
Raj You too Brutus? Shame on you. Dirty politics
Rate this:
Cancel
Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
26-அக்-202021:31:32 IST Report Abuse
Murugesan திராவிட கட்சிகளைவிட பிஜெபி மிகவும் மோசமான நயவஞ்சகர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X