வெறும் கோயில்களை திறப்பது மட்டுமே இந்துத்துவா அல்ல: உத்தவ் தாக்கரே

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
மும்பை: மஹா.,வில் கோயில் திறப்பு குறித்தும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே-ன் இந்துத்துவா குறித்தும் மஹா., கவர்னர் கோஷ்யாரி கேள்வியெழுப்பினார். இதற்கு, ‛வெறும் கோயில்களை திறப்பது மட்டுமே இந்துத்துவா அல்ல' என உத்தவ் பதிலளித்துள்ளார்.கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மஹாராஷ்டிராவில் கோயில்கள் திறக்கப்படவில்லை. இதனால் மஹா.,
Hindutva, UddhavThackeray, AttacksGovernor, உத்தவ் தாக்கரே, இந்துத்துவா, கவர்னர், கோஷ்யாரி

மும்பை: மஹா.,வில் கோயில் திறப்பு குறித்தும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே-ன் இந்துத்துவா குறித்தும் மஹா., கவர்னர் கோஷ்யாரி கேள்வியெழுப்பினார். இதற்கு, ‛வெறும் கோயில்களை திறப்பது மட்டுமே இந்துத்துவா அல்ல' என உத்தவ் பதிலளித்துள்ளார்.

கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மஹாராஷ்டிராவில் கோயில்கள் திறக்கப்படவில்லை. இதனால் மஹா., முதல்வர் உத்தவ் தாக்கரே-ன் இந்துத்துவா குறித்து கவர்னர் கோஷ்யாரி கேள்வியெழுப்பினார். இந்நிலையில், சிவசனோ கட்சியின் வருடாந்திர தசரா பேரணியில் உத்தவ் தாக்கரே பேசியதாவது: நாங்கள் இன்னும் கோயில்களை திறக்கவில்லை என்பதால் இந்துத்துவா குறித்து எங்களிடம் கேட்கின்றனர். மஹாராஷ்டிராவில் மாட்டிறைச்சியை தடை செய்துவிட்டு, கோவாவில் தடை செய்யவில்லை. இதுவா உங்கள் இந்துத்துவா?


latest tamil news



வெறும் கோயில்களை திறப்பது மட்டுமே எங்களின் இந்துத்துவா அல்ல. இந்துத்துவா என்றால் என்ன என்பதைப் பற்றி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ‛கோயில்களை திறந்து பூஜை செய்வது மட்டும் இந்துத்துவா அல்ல' என அழகாக விளக்கியுள்ளார். எனவே, அங்கிருந்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் (கோஷ்யாரி) அணியும் கறுப்பு தொப்பிக்குக் கீழே, மூளை இருந்தால் மோகன் பகவத் சொல்வதைப் புரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-அக்-202011:52:28 IST Report Abuse
Malick Raja பலரும் தங்களின் கருத்துக்கள் மூலம் தங்களின் இழிநிலையை வெளிப்படுத்தி இருப்பது அவர்களாலும் அறியாமலிருக்கும் அறிவிலித்தனம் என்பதும் உண்மை .. உண்மை வருவதை தடுக்கவே முடியாது என்பது உண்மையல்லவா
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
27-அக்-202006:33:44 IST Report Abuse
Indhuindian இன்னும் வாடிகன் லெந்து உத்தரவு வரலே அப்படின்னு உண்மைய சொல்லவேண்டியதுதானே
Rate this:
Cancel
அ rajan -  ( Posted via: Dinamalar Android App )
26-அக்-202021:14:48 IST Report Abuse
அ rajan உன்னை வைத்து சரத்பவார் நன்றாக சம்பாதிக்கிறான்.. உனக்கு முதல்வர் நாற்காலியை கொடுத்து அனுபவங்கள் இல்லாத உன்னை ஏமாற்றி மகாராஷ்டிராவை சுரண்டுகிரான்,.. அது உனக்குப் புரியவில்லை... நீயோ முதல்வர் நாற்காலி கிடைத்தது என்று ஆட்டம் போடுகிறாய்... துரோகிகளின் ஆட்டம் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது..... மோடியை கிள்ளு கீரையாக நினைத்து அவ்வப்போது அவரை திராணி இருந்தால் தைரியம் இருந்தால் மகாராஷ்டிர அரசை கலைத்து பார் என்று வீர வசனம் பேசுகிறது உன்னுடைய முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது... ஒரு நாளைக்கு அது நடக்கவும் போகிறது.... என்னவோ சிவசேனாவை மக்கள் தேர்ந்தெடுத்து உட்கார்த்தி வைத்துள்ளது போல் நினைப்பு மகாராஷ்டிரா என்றால் சிவசேனா தான் என்று ஒரு பிரமை..... சிவசேனா என்றால் மகாராஷ்டிராவின் குண்டர் படை என்பது எல்லோருக்கும் தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X