நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சர்

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய இணையமைச்சர் பிரதாப் சாரங்கி தெரிவித்தார்.பீஹாரில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதியை சமீபத்தில் வெளியிட்ட பாஜ., அதில், ‛பாஜ., வெற்றிப்பெற்றால், பீஹாரில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்,' என அறிவிக்கப்பட்டது. இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
PratapSarangi, CoronaVaccine, IndianCitizens, கொரோனா, தடுப்பூசி, இந்தியா, பிரதாப் சாரங்கி

புதுடில்லி: நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய இணையமைச்சர் பிரதாப் சாரங்கி தெரிவித்தார்.

பீஹாரில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதியை சமீபத்தில் வெளியிட்ட பாஜ., அதில், ‛பாஜ., வெற்றிப்பெற்றால், பீஹாரில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்,' என அறிவிக்கப்பட்டது. இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா போன்ற பெருந்தொற்றை போக்க தடுப்பூசி போடுவதிலும் அரசியல் செய்வதாக பல்வேறு கட்சிகள் விமர்சித்தன.


latest tamil news



தமிழகம், மத்திய பிரதேசம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள், தங்கள் மாநில மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தன. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


latest tamil news



இந்நிலையில், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் மத்திய கால்நடை, மீன்வளத்துறை இணையமைச்சர் பிரதாப் சாரங்கி கூறுகையில், ‛நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்காக நபர் ஒருவருக்கு 500 ரூபாய் வீதம் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது,' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரபு - மதுரை,இந்தியா
27-அக்-202003:42:45 IST Report Abuse
பிரபு அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி என்பது அரசின் கடமை அல்லவா? எதற்கு விளம்பரம்
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
27-அக்-202001:23:18 IST Report Abuse
Raj 2 நாளுக்கு முன் விவசாயி முதல்வர் சொன்னாரே.??????? அப்ப அவர் mouth piece தானா???????? 🙄🙄🙄🙄🙄🙄🙄
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
26-அக்-202021:19:48 IST Report Abuse
A.George Alphonse இன்னும் இது வரவே இல்லை. அதற்குள் இவ்வளவு பில்டப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X