மருத்துவத்துறையில் தமிழகம் முன்னோடி: முதல்வர் பழனிசாமி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருத்துவத்துறையில் தமிழகம் முன்னோடி: முதல்வர் பழனிசாமி

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (9)
Share
சென்னை: இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.சென்னை வடபழனியில் கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையை முதல்வர் பழனிசாமி இன்று (அக்.,26) திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக அரசு பல முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே தமிழகம் மருத்துவத்துறையில் முன்னணி மாநிலமாக
Tamilnadu, CM, Palanisamy, தமிழகம், முதல்வர், பழனிசாமி, மருத்துவத்துறை, முன்னோடி

சென்னை: இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையை முதல்வர் பழனிசாமி இன்று (அக்.,26) திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக அரசு பல முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே தமிழகம் மருத்துவத்துறையில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. 11 புதிய மருத்துவ கல்லூரிகள் மூலம் கூடுதலாக 1,650 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


latest tamil news



மருத்துவத்துறையில் 2030ம் ஆண்டுக்கான இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டது. வளர்ந்த நாடுகளை காட்டிலும், கொரோனா வைரஸ் தொற்றை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தியது நம் நாடுதான். நோயாளிகளிடம் வித்தியாசம் பாராமல் தரமான மருத்துவம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X