சியோல்: தென் கொரியாவின் மிகப்பெரிய பாராமெடிக்கல் நிறுவனம் செலிட்ரியான். கடந்த 2002-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மருந்து நிறுவனம் கடந்த 18 ஆண்டுகளாக உலக அளவில் அதிக புகழ் பெற்று வளர்ச்சி கண்டுவரும் நிறுவனம் ஆகும். தென்கொரியாவின் இரண்டாவது பணக்காரராக இந்த நிறுவனத்தின் ஓனர் முதலாளி திகழ்ந்து வருகிறார்.
கொரோனா வைரஸ் தாக்கம் துவங்கிய காலத்தில் செலிட்ரியான் நிறுவனம் கொரோனா பரிசோதனை கருவி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியது. தற்போது வெறும் பத்து நிமிடங்களில் முடிவை தெரிந்துகொள்ளும் ஓர் சோதனை கருவியை கண்டுபிடித்து உள்ளது செலிட்ரியான். வீட்டிலிருந்தபடியே வெறும் பத்து நிமிடத்தில் இந்த கருவி மூலம் கொரோனா உள்ளதா இல்லையா என சோதனை செய்து கொள்ளலாம்.

இந்த கருவிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் அங்கீகாரம் அளித்துள்ளதாக செலிட்ரியான் நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் இது தென்கொரியா மட்டுமல்லாமல் அண்டை நாடுகளுக்கும் விற்பனைக்கு வரும் எனவும் கூறியுள்ளது. இதேபோல குறைந்த கால அவகாசத்தில் சோதனை செய்துகொள்ள உலக அளவில் பல பாராமெடிக்கல் நிறுவனங்கள் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE