காங்.,-ஐ அடக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டது: குஜராத் முதல்வர்

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
ஆமதாபாத்: காங்கிரஸ் கட்சியை அடக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டதாக, குஜராத் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி பேசியுள்ளார்.குஜராத் மாநிலத்தில் வரும் நவ.,3-ம் தேதி 8 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக வல்சாத் மாவட்டத்தின் கப்ராடா நகரில் பாஜ., வேட்பாளர் ஜிது சவுத்ரியை ஆதரித்து அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி பிரசாரம்
Congress, Bury, Coffin, LastNail, SinkingShip, MoreDefections, AfterBypolls, Gujarat, CM, VijayRupani, காங்கிரஸ், அடக்கம், சவப்பெட்டி, மூழ்கும் கப்பல், குஜராத், இடைத்தேர்தல், முதல்வர், விஜய்ரூபானி

ஆமதாபாத்: காங்கிரஸ் கட்சியை அடக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டதாக, குஜராத் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி பேசியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் வரும் நவ.,3-ம் தேதி 8 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக வல்சாத் மாவட்டத்தின் கப்ராடா நகரில் பாஜ., வேட்பாளர் ஜிது சவுத்ரியை ஆதரித்து அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சிதைந்து வருகின்றது. தற்போது அந்த கட்சி மூழ்கும் கப்பல். குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 8 பேர் ராஜினாமா செய்ததால் தான் தற்போது இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


latest tamil news



காங்கிரசில் இருக்கும்போது மக்களின் பணிகளைச் செய்வது கடினம் என்பதை எம்.எல்.ஏ.,க்கள் உணர்ந்துள்ளனர். ஜிது சவுத்ரி, தனது தொகுதியின் முன்னேற்றத்திற்காக பாஜ.,வில் இணைந்துள்ளார். காங்கிரஸ் தொண்டர்களுக்கு அவர்களின் தலைமை மீது நம்பிக்கை இல்லை. ராகுலின் வழிநடத்தும் திறன் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றது. காங்கிரசை சவப்பெட்டியில் வைத்து கடைசி ஆணி அடித்து அடக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டது. இந்த இடைத்தேர்தல் மூலம் காங்கிரஸ் கட்சி மேலும் பின்னடைவை சந்திக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-அக்-202012:25:16 IST Report Abuse
Malick Raja இன்னும் கூடுதலாக சொல்லவும் .. அரசியலில் அவனவன் பிழைப்புக்கு எதையாவது சொல்லித்தான் வாழ்க்கையை நடத்த முடியும் .. உழைத்து சம்பாதித்து உண்ணுவதென்பது அரசியல்வாதிகளில் பெரும்பாலோருக்கு இல்லை .. அதன் வெளிப்பாட்டில் இதுபோன்ற செய்திகளும் உள்ளடங்கும் ...
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
27-அக்-202011:28:46 IST Report Abuse
Rafi பணம், பதவி உத்திரவாதம், சோதனை, மிரட்டல் என்ற தொடர் தொல்லைகளால், வெற்றி பெற்றவர்களில் பலவீனமானவர்களை வளைத்து விட்டால் கட்சி சிதைந்து விடாது. நண்பகத்தன்மையற்ற வாக்கு இயந்திர முறையை அகற்றி உத்திரவாதமுள்ள வாக்கு சீட்டு முறையில் தேர்தலை சந்தித்து, மக்கள் மீது நம்பிக்கை வைத்து சந்தேகமில்லாத வெற்றியை பெற முன்வருவீர்களா?
Rate this:
Cancel
TMN TNJ - Kuala Lumpur,மலேஷியா
27-அக்-202006:47:03 IST Report Abuse
TMN TNJ ஆணவம் தலைக்கேறிவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X