ஸ்ரீநகர்: மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தியின் தேசவிரோத பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த தலைவர்கள் 3 பேர் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
கடந்த ஆண்டு, ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, மாநிலம், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அப்போது, ஜம்மு - காஷ்மீர் அரசியல் தலைவர்கள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, 14 மாதங்களுக்குப் பின், முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி, சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் மெஹபூபா முப்தி, கடந்த சில நாட்களுக்கு முன்னர், முதன்முறையாக, நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீருக்கு, சிறப்பு அந்தஸ்தின் கீழ் வழங்கப்பட்டிருந்த மாநிலக் கொடி மீட்கப்பட்டால் தான், இங்கு தேசியக் கொடி ஏற்றப்படும். அதன்பின் தான் தேசியக் கொடியை கையில் எடுப்பேன். இவ்வாறு, அவர் கூறினார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரை தேச விரோத சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தியது.

இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சியின் டிஎஸ் பஜ்வா, வேத் மகாஜன் மற்றும் ஹூசைன் ஏ வாபா ஆகியோர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இதற்கான கடிதத்தை மெகபூபாவிற்கு அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள், மெகபூபாவின் தேச விரோத பேச்சு மற்றும் அவரின் குறிப்பிட்ட சில செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது தங்களை காயப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE