பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்

Added : அக் 26, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த 13ம்தேதி, வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. விக்கிரவாண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், அவருக்கு முதலுதவி சிகிச்சை
அமைச்சர், துரைக்கண்ணு, கவலைக்கிடம்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 13ம்தேதி, வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. விக்கிரவாண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.


latest tamil news



பின், உயர் சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியானது. நுரையீரல் பாதிப்பால், மூச்சுத் திணறல் இருந்ததால், வென்டிலேட்டர் வாயிலாக, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அது பலன் தராத நிலையில், தற்போது அதற்கு அடுத்தபடியாக, எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் துரைகண்ணுவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து இன்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
துரைக்கண்ணுவிற்கு 90 சதவீத நுரையீரல் பாதிப்பு உள்ளதால், முக்கிய உடல் உறுப்புகள் சீராக இயங்க வைக்கும் பணி சவாலாக உள்ளது. அவரது உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதை 24 மணி நேரத்திற்கு பின்னரே கணிக்க முடியும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-அக்-202017:22:39 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) நல்லதே நடக்கட்டும் எல்லாம் இறைவன் செயல்.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
27-அக்-202012:48:46 IST Report Abuse
Rafi அன்பாக பழக கூடியவர், பூரண நலம் பெற வாழ்த்துகின்றேன். கொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனை போதிய வளர்ச்சி அடையவில்லை என்றே தோன்றுகின்றது.
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
27-அக்-202001:12:01 IST Report Abuse
Raj தர்மம் தலை காக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X