ஆண்களுக்கு அதிகம்
கொரோனா பாதித்தவர்களுக்கு அவர்களது உடலில் உருவாகும் வைரசை எதிர்த்து போராடும் நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபாடி), பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் என போர்ச்சுக்கல் விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிவித்துள்ளனர். இது ஐரோப்பாவின் இம்யூனாலஜி இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. நோயாளிகள், சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள் என 500 பேரிடம் நடத்திய சோதனையில் இதனை கண்டறிந்தனர். இதில் 90 சதவீத நோயாளிகளுக்கு ஏழு மாதம் வரை ஆன்டிபாடி இருக்கிறது. இதில் வயது வித்தியாசமில்லை.
தகவல் சுரங்கம்
எத்தனை பேருக்கு 'நோபல்'
நோபல் பரிசு 1901 முதல் 2020 வரை ஆறு பிரிவுகளில் சேர்த்து 603 முறை வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக இயற்பியலுக்கு 114, குறைந்தபட்சமாக பொருளாதாரத்துக்கு 52 முறை விருது வழங்கப்பட்டது. 352 முறை ஒரு நபருக்கு, 143 முறை இரண்டு நபர்களுக்கு, 108 முறை மூன்று நபர்களுக்கு என ஒட்டுமொத்தமாக இதுவரை 962 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக மருத்துவ பிரிவில் 222 பேர் விருது பெற்றனர். இதற்கு அடுத்த இடங்களில் இயற்பியல் 216, வேதியியல் 186, அமைதி 135, இலக்கியம் 117, பொருளாதாரம் 86 பேர் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE