மோடி உருவ பொம்மை எரிப்பு: காங்.கை விளாசிய நட்டா

Updated : அக் 28, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி : ''பிரதமர் மற்றும் பிரதமர் அலுவலகத்தை எப்போதும் மதிக்காத காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்து, தங்களுடைய சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளது,'' என, பா.ஜ., தேசியத் தலைவர், ஜே.பி.நட்டா கடுமையாக விமர்சித்துஉள்ளார். போராட்டம் பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ளது. வேளாண் மசோதாக்களுக்கு,
மோடி, உருவ பொம்மை, எரிப்பு,  காங்கிரஸ்,  நட்டா

புதுடில்லி : ''பிரதமர் மற்றும் பிரதமர் அலுவலகத்தை எப்போதும் மதிக்காத காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்து, தங்களுடைய சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளது,'' என, பா.ஜ., தேசியத் தலைவர், ஜே.பி.நட்டா கடுமையாக விமர்சித்துஉள்ளார்.


போராட்டம்


பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ளது. வேளாண் மசோதாக்களுக்கு, காங்கிரஸ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தசரா பண்டிகையையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டத்தை, காங்கிரஸ் கட்சி, பஞ்சாபில் நடத்தியது.

இது குறித்து, சமூக வலை தளத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், நட்டா கூறியுள்ளதாவது:நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பிரதமர் பதவியையும், பிரதமர் அலுவலகத்தையும் எப்போதும் மதித்ததில்லை. கடந்த, 2004 - 2014 காலத்தில், பிரதமர் பதவியை தங்கள் கைப்பாவையாக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வைத்திருந்தனர்.பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்கும் நாடகத்தை, காங்., முன்னாள் தலைவர் ராகுல் நடத்திஉள்ளார்.


தலைகுனிவு



இது எதிர்பார்த்த ஒன்று தான்; ஆனால், அவர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தக் கூடியது. அவநம்பிக்கை மற்றும் வெட்கமின்மை ஆகியவை சேர்ந்திருப்பது ஆபத்தானது. ஜனநாயகம் குறித்து, காங்., தலைவர் சோனியா, பொய்யாக பேசி வருகிறார். ஆனால், அவரது மகனான ராகுல், வெறுப்பு அரசியலை நடத்தி வருகிறார்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-அக்-202022:04:13 IST Report Abuse
kulandhai Kannan அதிகாரம் பறிக்கப்பட்டதால் ஏற்பட்ட வயிற்றெரிச்சல் காங்கிகளுக்கு.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
27-அக்-202017:37:46 IST Report Abuse
sankaseshan காங்கிரஸ்கரன் அடாவடி அளவுக்கு மீறி போகிறது இவனுங்களை அடக்காவிட்டால் இன்னும் எல்லை மீறுவார்கள் . பப்பு திமிரை அடக்கவேண்டும் .
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
27-அக்-202016:33:36 IST Report Abuse
Rafi வெத்து வெட்டு அறிக்கைகளை இனி நம்ப போவதில்லை என்பதை நாடெங்கிலும் நடக்கும் போராட்டங்கள் சாட்சியாகி கொண்டிருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X