அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் ரஷ்யா..!

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
அமெரிக்காவில் வரும் நவ. 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. தேர்தலில் கடைசி வாரம் ஆன தற்போது பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது. குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரான டிரம்ப் ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பிடேனை தீவிரமாக விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.ஜோ பிடேனின் மகனுக்கு ரஷ்ய

அமெரிக்காவில் வரும் நவ. 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.



latest tamil news



தேர்தலில் கடைசி வாரம் ஆன தற்போது பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது. குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரான டிரம்ப் ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பிடேனை தீவிரமாக விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஜோ பிடேனின் மகனுக்கு ரஷ்ய அரசியல் தலைவர் ஒருவரது நிறுவனத்துடன் தொழில் தொடர்பு உண்டு என முன்னதாக டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் அதிபர் தேர்தலில் வெல்வதற்காக 3.5 மில்லியன் டாலர் ரஷ்யாவிடமிருந்து பெற்றிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.


latest tamil news



இந்த நிலையில் ஜோ பிடேன் தற்போது அமெரிக்க தேர்தலுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நாடு ரஷ்யா எனத் தெரிவித்துள்ளார்.அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ரஷ்யாவின் ஹேக்கிங் தலையீடு இருப்பதாகபலமுறை ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் ஜோ பிடேன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அரசு ரகசியங்களையும் பாதுகாப்பு விஷயங்களையும் ரஷ்யா ஹேக்கர்கள் மூலம் திருடுவதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து அமெரிக்க உளவுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
27-அக்-202002:41:17 IST Report Abuse
NicoleThomson ரெண்டு வெள்ளைக்கார துரைகளும் சித்து விளையாட்டு காட்டுறாங்க
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
26-அக்-202022:40:37 IST Report Abuse
DARMHAR எத்தனை முறை சொல்வது ஜோ பிடன் என்று கூறுவது தவறு என்று , அவர் பெயர் ஜோ பைடன் .
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
26-அக்-202022:10:37 IST Report Abuse
S. Narayanan நெருப்பில்லாமல் புகையாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X