பொது செய்தி

இந்தியா

விசாரணைக்கு ஒத்துழைத்த மோடி: புத்தகத்தில் ராகவன் தகவல்

Updated : அக் 28, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி : 'கடந்த, 2002ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக, அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியிடம், சிறப்பு விசாரணை குழுவினர், ஒன்பது மணி நேரம் தொடர்ந்து நடத்திய விசாரணையின் போது, தேநீர் கூட அருந்தாமல், கேள்விகளுக்கு பதில் அளித்தார்' என, விசாரணை குழுவின் தலைவர், ராகவன் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.குஜராத்தில், 2002ல் வெடித்த கலவரம் குறித்து
விசாரணை, மோடி, புத்தகம்,  ராகவன், தகவல்

புதுடில்லி : 'கடந்த, 2002ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக, அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியிடம், சிறப்பு விசாரணை குழுவினர், ஒன்பது மணி நேரம் தொடர்ந்து நடத்திய விசாரணையின் போது, தேநீர் கூட அருந்தாமல், கேள்விகளுக்கு பதில் அளித்தார்' என, விசாரணை குழுவின் தலைவர், ராகவன் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தில், 2002ல் வெடித்த கலவரம் குறித்து விசாரணை நடத்த, சிறப்பு விசாரணை குழுவை அமைத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த குழுவின் தலைவராக, தமிழரான ஆர்.கே.ராகவன் நியமிக்கப்பட்டார்.அதற்கு முன், சி.பி.ஐ., தலைவராக பதவி வகித்து வந்த ராகவன், போபர்ஸ் ஊழல், கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளின் விசாரணை அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்ட ராகவன், ‛எ ரோடு வெல் ட்ராவல்டு' என்ற தலைப்பில், தன் சுயசரிதையை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.அதில், குஜராத் கலவரம் குறித்து, அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

குஜராத் கலவரம் தொடர்பாக, அப்போதைய மாநில முதல்வர், நரேந்திர மோடியிடம், விசாரணை நடத்த அழைப்பு விடுத்தோம். காந்திநகரில் உள்ள, சிறப்பு விசாரணை குழு அலுவலகத்துக்கு, அவர் நேரடியாக வந்தார்.அவருக்கு தேவையான குடிநீர் பாட்டிலை, அவரே எடுத்து வந்தார். ஒன்பது மணி நேரம், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்துக்கும் பொறுமையாக பதில் அளித்தார்.விசாரணையின் போது, அதிகாரிகள் அளித்த தேநீரை கூட அவர் அருந்தவில்லை. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sri - mumbai,இந்தியா
29-அக்-202011:28:55 IST Report Abuse
sri மோடியோடு நெருங்கி பழகியவர்களுக்கு சரி, அவருடன் அதிகார வர்க்கத்தில் இருந்தவர்களும் தனிப்பட்ட முறையில் அவர் யாரையும் நிந்தித்ததாகவோ, கெடுதல் செய்ததாகவோ சொன்னதே கிடையாது. நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து கர்மா யோகி போல வாழும் அவரை, அரைவேக்காடு ராகுலும் , ஸ்தாலினும் , மம்தா பானர்ஜியம் தான் தூற்றிக்கொண்டு அலைவார்கள்.
Rate this:
Cancel
Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா
27-அக்-202015:53:18 IST Report Abuse
Ram Mayilai 2014 ல் பிரதமர் ஆவோம் என்றா எண்ணினார் திரு.மோடி. 2002ல் முழு ஒத்துழைப்பு கொடுத்து உள்ளார். இப்போது சிலர் வேறு விதமாக கருத்துகள் கூறுகிறார்கள். ஆனால் ஆண்டனியோ மைனாவும் ப.சி.யும் பல வருடங்கள் , குஜராத் மாநில முதல்வராக இருக்கும்போதே திரு.மோடியை எவ்வளவு கேவலம் செய்தார்கள், ஊழல் கிடைக்காதா என்று அலைந்தார்கள். அதை பற்றி ஏன் பேசுவதில்லை?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
27-அக்-202014:57:30 IST Report Abuse
r.sundaram ராஜீவ் கொலை வழக்கையும் துப்பு விசாரணை பண்ணியதும் இவர்தானே. தான் எழுதிய புத்தகத்தில் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார், இதில் எங்கே கோர்ட், சம்மன் எல்லாம்? .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X