அரைசதம் விளாசினார் சுப்மன் கில்: பஞ்சாப் பவுலர்கள் அபாரம்

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020
Share
Advertisement
சார்ஜா: கோல்கட்டா அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் பவுலர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். கோல்கட்டா அணி 20 ஓவரில் 149/9 ரன்கள் மட்டும் எடுத்தது. ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. சார்ஜாவில் நடக்கும் லீக் போட்டியில் கோல்கட்டா, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 'பிளே ஆப்' செல்ல இரு அணிகளுக்கும் வெற்றி முக்கியம் என்ற நிலையில்

சார்ஜா: கோல்கட்டா அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் பவுலர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். கோல்கட்டா அணி 20 ஓவரில் 149/9 ரன்கள் மட்டும் எடுத்தது.



latest tamil news




ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. சார்ஜாவில் நடக்கும் லீக் போட்டியில் கோல்கட்டா, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 'பிளே ஆப்' செல்ல இரு அணிகளுக்கும் வெற்றி முக்கியம் என்ற நிலையில் 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் பீல்டிங் தேர்வு செய்தார். இரு அணியிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.


துவக்கம் சரிவு


கோல்கட்டா அணிக்கு சுப்மன் கில், ராணா ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. மேக்ஸ்வெல் வீசிய போட்டியின் 2வது பந்தில் ராணா (0) போல்டானார். இரண்டாவது ஓவரை முகமது ஷமி வீசினார். இதன் 4வது பந்தில் திரிபாதி (7) அவுட்டானார். கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக்கும் (0) கிளம்ப, கோல்கட்டா 10 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.


latest tamil news




சுப்மன் அரைசதம்


பின் இணைந்த கேப்டன் மார்கன், சுப்மன் கில் ஜோடி வேகமாக ரன்கள் குவித்தது. ஷமி ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சர் அடித்து அதிர்ச்சி கொடுத்தார் சுப்மன். மறுபக்கம் முருகன் அஷ்வின், மேக்ஸ்வெல் பந்துகளை தன் பங்கிற்கு சிக்சருக்கு விரட்டினார் மார்கன்.4வது விக்கெட்டுக்கு 47 பந்தில் 81 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கன் (40), பிஷ்னாய் சுழலில் சிக்கினார். இதன் பின் மீண்டும் சரிவு ஏற்பட்டது. சுனில் நரைனை (6), ஜோர்டன் வெளியேற்றினார்.
மனம் தளராத சுப்மன் கில், ஐ.பி.எல்., தொடரில் 7வது அரைசதம் அடித்தார்.தடுமாறிய நாகர்கோட்டி (6), முருகன் அஷ்வினிடம் சரண் அடைந்தார். கம்மின்ஸ் (1) நீடிக்கவில்லை. சுப்மன் கில் 57 ரன்னுக்கு கிளம்பினார்.11 ஓவரில் 101/5 ரன்கள் எடுத்த கோல்கட்டா அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டும் எடுத்தது. பெர்குசன் (24) அவுட்டாகாமல் இருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X