அக்., 27, 1920
கேரள மாநிலம், கோட்டயம் அருகே உள்ள உழவூர் என்ற கிராமத்தில், 1920 அக்., 27ல் பிறந்தவர், கொச்சேரில் ராமன் நாராயணன் என்ற கே.ஆர்.நாராயணன். லண்டனில் பத்திரிகையாளராக பணியாற்றியவர், அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கோரிக்கையை ஏற்று, இந்திய வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார். ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் துாதராக பணியாற்றினார். பின், இந்திய வெளியுறவுத் துறை செயலரானார்.காங்., சார்பில், கேரளாவில் இருந்து, மூன்று முறை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய திட்டத் துறை, வெளியுறவுத் துறை, அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவிகளை ஏற்று, சிறப்பாக பணியாற்றினார்.இந்தியாவின், 10வது ஜனாதிபதியாக, 1997 முதல், 2002 வரை பணியாற்றினார். 2005 நவ., 9ம் தேதி, தன், 85வது வயதில் காலமானார்.கே.ஆர்.நாராயணன் பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE