இளைஞர்கள்,முதியோரிடத்தில் நோய் எதிர்ப்பு சக்தி:நம்பிக்கை தரும் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி!

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
லண்டன்: இளைஞர்கள், முதியோரிடத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை சரியான முறையில் துாண்டி வருவதாக, அஸ்ட்ரஜெனகா தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரஜெனகா. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த வாக்சினை தயாரித்து அதை பரிசோதனை செய்து வருகிறது.இந்த சோதனையின் லேட்டஸ்ட் நிலவரம் குறித்து அஸ்ட்ரஜெனகா செய்தித் தொடர்பாளர்

லண்டன்: இளைஞர்கள், முதியோரிடத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை சரியான முறையில் துாண்டி வருவதாக, அஸ்ட்ரஜெனகா தெரிவித்துள்ளது.



latest tamil news



ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரஜெனகா. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த வாக்சினை தயாரித்து அதை பரிசோதனை செய்து வருகிறது.
இந்த சோதனையின் லேட்டஸ்ட் நிலவரம் குறித்து அஸ்ட்ரஜெனகா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், முதியோர்கள் மற்றும் இளைஞர்களிடம் இந்த தடுப்பு மருந்தானது நோய் எதிர்ப்பு சக்தியை நன்றாக தூண்டி விடுகிறது. அதேசமயம், மிகவும் முதியோர்களிடமிருந்து இந்த துாண்டுதல் சற்று குறைவாகவே உள்ளது.
தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரஜெனகா இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் வாக்சின், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மருத்துவப் பரிசோதனையில் இருந்து வருகிறது.


latest tamil news



கடந்த ஜனவரி முதல் இந்த வாக்சின் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. சிம்பன்சி குரங்கிலிருந்து எடுக்கப்பட்ட வைரஸின் பலவீனமான வடிவத்திலிருந்து உருவாக்கப்பட்டது தான் இந்த வாக்சின் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த வைரஸ் சோதனையில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்தியாவில் இந்த சோதனையை புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் மேற்கொள்கிறது.
இது தடுப்பூசி 18 முதல் 55 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான பெரியவர்களின் குழுவில் "வலுவான நோயெதிர்ப்பு மறுமொழிகளை" உருவாக்கியது என்பதைக் காட்டுகிறது, பைனான்சியல் டைம்ஸ் முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
26-அக்-202022:07:51 IST Report Abuse
S. Narayanan மற்ற வயதினருக்கு......................?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X