ஓ.பி.சி.,க்கு 50 சதவீத மருத்துவ இடங்கள் இல்லை!

Updated : அக் 27, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement
புதுடில்லி: 'மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில், ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 50 சதவீத ஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்து, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டில், ஓ.பி.சி., பிரிவினருக்கு, 50 சதவீத ஒதுக்கீடு இல்லை என்ற நிலை
ஓ.பி.சி., மருத்துவ இடங்கள், உச்சநீதிமன்றம்

புதுடில்லி: 'மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில், ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 50 சதவீத ஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்து, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

இதனால், நடப்பு கல்வியாண்டில், ஓ.பி.சி., பிரிவினருக்கு, 50 சதவீத ஒதுக்கீடு இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து, மருத்துவப் பட்டப் படிப்புகளில், 15 சதவீதமும், மேற்படிப்புகளில், 50 சதவீத இடங்களும், மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன.சட்டவரையறைஇந்நிலையில், 'தமிழகத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில், மத்திய தொகுப்பில், 50 சதவீத இடங்களை, ஓ.பி.சி., பிரிவினருக்கு அளிக்க வேண்டும்' என, தமிழக அரசு சார்பிலும், சில அரசியல் கட்சிகள் சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், 'மருத்துவப் படிப்புகளில், மத்திய தொகுப்புக்கான இடங்களில், ஓ.பி.சி., பிரிவினருக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது.

இது பற்றிய சட்ட வரையறைகளை, மூன்று மாதங்களில் உருவாக்கும்படியும் உத்தரவிட்டிருந்தது.இதற்கிடையே, இந்த இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த உத்தரவிடக் கோரி, தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த வாரம், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'இந்த இட ஒதுக்கீட்டை தமிழகத்துக்கு மட்டும் வழங்கினால், சட்டச் சிக்கல் ஏற்படும். 'ஏற்கனவே, 27 சதவீத ஒதுக்கீட்டையே வழங்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே, நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்த முடியாது' என, மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.அமல்படுத்தமுடியாதுஅப்போது, தேசிய மருத்துவ கமிஷன் மற்றும் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டதாவது:
நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள், இந்தாண்டு, ஜன., - பிப்., மாதத்தில் பெறப்பட்டன. அப்போது, அவர்கள் எந்தப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கிறோம் என்பதை தெரிவித்துள்ளனர். அதன்படியே, நீட் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு உள்ளன.அதனால், இந்தக் கல்வியாண்டில், ஓ.பி.சி., பிரிவினருக்கான, 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டது.


விசாரணைஇந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் தன் உத்தரவில் திட்டவட்டமாக தெரிவித்தது. இதையடுத்து, மருத்துவப் படிப்புகளில் நடப்பு கல்வியாண்டில், ஓ.பி.சி., பிரிவினருக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


தலைவர்கள் கருத்து
'மருத்துவப் படிப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு தர முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஏமாற்றம் அளிக்கிறது' என, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ கல்வியிடங்களில், இந்த ஆண்டே, 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என, பிரதமர் மோடியை கேட்டுக் கொள்கிறேன். பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினர், இட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்காகவும், பட்டியலின சமூகத்திற்காகவும், பிரதமர் காட்ட வேண்டும் என, நாடு எதிர்பார்க்கிறது; பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி: உச்ச நீதிமன்ற தீர்ப்பால், தமிழகத்தில் இருந்து, அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும், 251 மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் ஒருவருக்கு கூட, இடம் கிடைக்காத நிலை, உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏற்பட்டுள்ளது.
தமிழக பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டதற்கு, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எடுத்த நிலையும், இந்த வழக்கை அலட்சியப் போக்குடன் நடத்திய, அ.தி.மு.க., அரசும் தான் காரணம்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான, 'ஆன்லைன்' கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும். அடுத்த சில நாட்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுத்து, உடனே செயல்படுத்த, மத்திய அரசு முன்வர வேண்டும். மத்திய அரசு நினைத்தால், இது சாத்தியம் தான். இந்தக் கோரிக்கையை தமிழகத்தில் இருந்து, அனைத்து கட்சித் தலைவர்கள் குழுவை, டில்லிக்கு அழைத்து சென்று, பிரதமரை சந்தித்து வலியுறுத்த, முதல்வர் இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான, பெரும் அதிர்ச்சி அளிக்கின்ற தீர்ப்பு.இந்த பிரச்னையில், மத்திய அரசு துவக்கத்தில் இருந்தே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான வஞ்சக போக்கை மேற்கொண்டு வந்தது கண்டிக்கத்தக்கது.

த.மா.கா., தலைவர் வாசன்: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, எதிர்பார்ப்பிற்கு மாறாக, மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. கல்வி குறித்து எடுக்கும் எந்த முடிவானாலும், மத்திய, மாநில அரசுகள் காலதாமதமின்றி, மாணவர்கள் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும். இதை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்தும் என, நம்புகிறேன். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a rajan -  ( Posted via: Dinamalar Android App )
27-அக்-202020:11:57 IST Report Abuse
a rajan சமூக நீதி என்று பேசும் திருமாவளவன் வைகோ ஸ்டாலின் அழகிரி முத்தரசு வீரமணி ராமதாசு போன்றவர்களுக்கு ஒரு கேள்வி... உங்கள் கட்சியின் அடிமட்டத் தொண்டனுக்கு என்ன மரியாதை உள்ளது உங்கள் கட்சியில்... அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு நீங்கள் என்ன உதவி செய்கிறீர்கள்... முதலில் உங்கள் கட்சிக்குள் சமூகநீதியை நிலைநாட்டுங்கள்... அண்ணா அறிவாலயத்தில் சாதாரண தொண்டன் உள்ளே போக முடியாது..... பணம் கொண்டு வந்தால் தான் போக முடியும்... வைகோ அவர்கள் நினைத்தால் அமெரிக்கா பறந்து விடுவார்... ஸ்டாலின் அவர்கள் லண்டன் போவார்... ஆனால் அடிமட்ட தொண்டன் அல்லல் படுவான்...நீங்கள் எல்லோரும் சேர்த்து வைத்திருக்கும் கட்டுக் கட்டான பணங்களை வறுமை நிலையில் இருக்கும் உங்கள் கட்சித் தொண்டர்களுக்கு பகிர்ந்து அளியுங்கள்... அதுதான் உண்மையான சமூக நீதி... அன்புமணி ராமதாஸ் பெண்ணின் கல்யாணத்துக்கு பணக்காரர்களுக்கு மட்டுமே தயாரிக்கப்படும் விலை உயர்ந்த அயல் நாட்டு காரை பரிசளித்தார்... எங்கிருந்து இவர்களுக்கெல்லாம் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது.... எல்லாக் கட்சித் தலைவர்களும் கோடிக்கணக்கில் விலையுயர்ந்த வாகனங்களை உபயோகிக்கிறார்கள்... சாதாரண தொண்டன் அவர்களைப் பார்த்து பெருமூச்சுதான் விட முடியும்..... இதுதான் சமூக நீதி..... புத்திசாலி ஏழை மாணவன் கஷ்டப்பட்டு படித்து நிறைய மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் ஜாதியை காரணம் காட்டி அரசு வேலைக்கு தகுதி இழக்க செய்கிறார்கள் நீட்டில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும் சாதியை காரணம் காட்டி இட ஒதுக்கீடு என்ற பெயரில் மேல்படிப்புக்கு மறுக்க ப் படுகிறான்... இதுதான் நீங்கள் சமூக நீதியை காப்பாற்றும் அழகா... எல்லா மாநிலங்களுக்கும் ஒரு சட்டம் ஆனால் தமிழ்நாட்டுக்கு தனி சட்டம் என்று போராடுகிறீர்கள்... OBC க்கான 50 சதவிகித மருத்துவ இட ஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டில் அமல் படுத்த முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல எல்லா மாநிலங்களுக்கும் இதே சட்டம் தான்... ஆனால் நீங்கள் மட்டும் தமிழ்நாட்டுக்கு தனி சட்டம் கேட்கிறீர்கள்... நீங்கள் சொல்வதைத்தான் அரசு செய்ய வேண்டும் என்று சர்வாதிகாரத் தனமாக அரசியல் செய்கிறீர்கள்... நீங்கள் எல்லோரும் சமூக நீதிக்காக போராடவில்லை உங்கள் சுய லாபத்திற்காக அரசியல் செய்து வேண்டுமென்றே ஒரு அமைதியற்ற சூழலை தினம் தினம் போராட்டம் என்ற பெயரில் உருவாக்குகிறீர்கள்... பொழுது விடிந்து தூங்கும் வரை மோடி ஒழிக பிஜேபி ஒழிக என்ற கோஷங்களை எழுப்புகிறீர்கள் ... இதுதான் மோடியின் சக்தி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.... அவர் பெயரை உச்சரிக்கா விட்டால் உங்களுக்கு அன்றைய தினம் வெறுமையாக இருக்கும்.... தினமும் அவர் பெயரை சொல்லிக் கொண்டே இருங்கள்...சமூகநீதி என்ற வார்தயை உங்கள் சுயநலத்திற்க்கு பயன் படுத்தாதீர்கள்.
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
27-அக்-202021:53:47 IST Report Abuse
Ellammanசாதாரண தொண்டன் நிலை பீ ஜெ பீ யில் மட்டும் ரொம்ப உயர்ந்து நிற்கிறதா??? மோடி உலகம் சுற்றும் நேரத்தில் உடன் அழைத்துச்செல்வது பெரிய பெரிய பணக்கார தொழிலதிபர்களை... சாதாரண தொண்டன் ஒரு முறை கூட மோடியின் பல பல வெளியாட்டு சுற்றுப்பயங்களில் உடன் சென்றதில்லை... அமித் ஷா மகனின் வருமான வரி கணக்குகளை கடந்த பத்து வருட கணக்குகளை ஒப்பீடு செய்யுங்கள்.. பிற்பாடு அன்புமணி ராமதாஸின் திருமண பரிசை பற்றி பேசலாம்...ஆங்கிலம் புரிந்துகொள்ள முடியும் என்றால் இந்த ஒரு பத்தி மட்டும் படித்துப்பாருங்கள்... இடஒதுக்கீடு எவ்வளவு முக்கியம் என்று ...இந்த பத்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பின் ஒரு பகுதி. /// Imagine two runners at the starting line, readying for the 100-yeard dash. One has his legs shackled, the other not. The gun goes off and the race s. Not surprisingly, the unfettered runner immediately takes the lead and then rapidly increases the distance between himself and his shackled competition. Before the finish line is crossed, over the judging official blows his whistle, calls off the contest on the grounds that the unequal conditions between the runners made it an unfair competition, and orders removal of the shackles.' Surely few would deny that pitting a shackled runner against an unshackled one is inequi and does not provide equality of opportunity. Hence, cancelling the race and freeing the disadvantaged runner of his shackles seem altogether apporpriate. Once beyond this point, however, agreement fades rapidly. The key question becomes: what should be done so that the two runners can resume the contest on a basis of fair competition? Is it enough after removing the shackles, to place both runners back at the starting point? Or is "something more" needed, and if so, what? Should the rules of the running be ed, and if so, how? Should the previously shackled runner be given a compensatory edge, or should the other runner be handicapped in some way? How much edge or handicap?...////...
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
27-அக்-202021:57:50 IST Report Abuse
Ellammanபுத்திசாலி மாணவன் நன்றாக படித்து பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இருந்தாலும் அவனை மற்றோரு தேர்வில் தேர்ச்சிஅடையவிடாத வகையில் நடத்தி அவன் ஆசையை ..அவன் குறிக்கோளை பூர்த்தி செய்ய முடியாமல் செய்கிறீர்களே.. அதை என்ன என்று சொல்வது?? இடஒதுக்கீடு இல்லாத காலகட்டங்களில் எத்தனை ஏழை புத்திசாலி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவனை படிக்க அனுமதித்தீர்கள் ..இடம் கொடுத்தீர்கள் ???...
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
27-அக்-202019:40:49 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN அப்போ ஏன் நல்ல டாக்டரிடம் அதிகம் மக்கள் போகிறார்கள் .அதில் இட ஒதுக்கீடு ஏன் தலை இடல. இடஒதுக்கீடு ஜாதியை வைத்து கொடுப்பதாலே தான் நல்லபலனை அரசியலில் காண முடியாமல் குற்றங்கள் லஞ்சங்கள் அதிகரிக்கின்றன. காசுக்கு ஏற்ற பணியாரம் என்று ஏன்சொல்கிறார்கள் அறிவுக்கு ஏற்ற பலாபலன்.திறமைக்கு ஏற்ற முக்கியத்துவம் கொடுத்தால் நாட்டில் முன்னேற்றத்தை காணலாம். நல்ல நிர்வாகம் காணலாம். எல்லாஜாதியிலும் திறமை சாலிகள் இல்லாமல் இல்லை. நோய் ஜாதியை வைத்து வருவதில்லை .இந்த இட ஒதுக்கீடு என்று ஒழிக்கப்படுமோ அன்றுதான் நாடு உறுபடும்.
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
27-அக்-202022:01:22 IST Report Abuse
Ellammanஎல்லா நல்ல டாக்டர்களும் இடஒதுக்கீடு மூலம் படித்தவர்கள் அல்ல என்று நினைக்கத்தூண்டும் வகையில் கருத்திடும் இந்த ஆதிக்கமனோபான்மையை என்னவென்று கூறுவது??? இப்படிப்பட்ட ஆதிக்கமோபான்மை இருக்கும் வரை இடஒதிக்கீட்டின் அவசியம் மிக மிக அதிகம் தேவையாகிறது.......
Rate this:
Cancel
Sadagopan Varadhachari - Hosur,இந்தியா
27-அக்-202019:39:51 IST Report Abuse
Sadagopan Varadhachari சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்த போது இது திமுகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று மார் தட்டி விட்டு உச்ச நீதி மன்ற தீர்ப்பு வந்தவுடன் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறார் . என்ன அரசியல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X