மாப்பிள்ளை வீட்டார் செலவில் குரும்பர் வீட்டு கல்யாணம்: வரதட்சணையும் இல்லை விவாகரத்தும் இல்லை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாப்பிள்ளை வீட்டார் செலவில் குரும்பர் வீட்டு கல்யாணம்: வரதட்சணையும் இல்லை விவாகரத்தும் இல்லை

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (8)
Share
குன்னுார் : நீலகிரியில் வசிக்கும் குரும்பர் இன ஆதிவாசி மக்கள் மாப்பிள்ளை வீட்டார் செலவில், திருமணத்தை நடத்துவதுடன், வரதட்சனையும் வாங்காமல், பாரம்பரியத்துடன் நடத்துவது வரவேற்பை பெற்றுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் குன்னுார்கோத்தகிரி, மஞ்சூர் உட்பட பல்வேறுஇடங்களில் குறும்பர் இன ஆதிவாசிமக்கள் வசிக்கின்றனர். இவர்களின்வாழ்வாதாரம் மேம்படாத நிலையிலும்,பலர்

குன்னுார் : நீலகிரியில் வசிக்கும் குரும்பர் இன ஆதிவாசி மக்கள் மாப்பிள்ளை வீட்டார் செலவில், திருமணத்தை நடத்துவதுடன், வரதட்சனையும் வாங்காமல், பாரம்பரியத்துடன் நடத்துவது வரவேற்பை பெற்றுள்ளது.



latest tamil news



நீலகிரி மாவட்டத்தில் குன்னுார்கோத்தகிரி, மஞ்சூர் உட்பட பல்வேறுஇடங்களில் குறும்பர் இன ஆதிவாசிமக்கள் வசிக்கின்றனர். இவர்களின்வாழ்வாதாரம் மேம்படாத நிலையிலும்,பலர் பட்டப்படிப்பு உட்பட பல்வேறுபடிப்புகள் படித்து வருகின்றனர்.பொதுவாக திருமணங்கள் பெண் வீட்டார் செலவிலேயே நடத்தப்படும். ஆனால் குறும்பர் இன ஆதிவாசி மக்கள் மாப்பிள்ளை வீட்டார் செலவில் திருமணம் நடத்துகின்றனர்.
இந்நிலையில், தற்போது கொரோனாபாதிப்பு காரணமாக திருமணங்கள் நடத்தகட்டுப்பாடுகள் உள்ளதால், அதற்கேற்பகுறும்பர் இன ஆதிவாசி மக்கள்திருமணம் நடத்துகின்றனர். ட்ரூக் அருகே, செங்கல் புதுார்கிராமத்தில் மக்கள் முக கவசம்அணிந்து, பாரம்பரிய நிகழ்ச்சிகள்நடத்தி, கோத்தகிரி அருகே கடசோலை மூர்த்தி, சீதை ஆகியோருக்கு எளிமையாக திருமணம் நடத்தி வைத்தனர்.
நீலகிரி மாவட்ட ஆலு குரும்பர் நல சங்கதலைவர் மணி கூறுகையில், "குரும்பர்இன ஆதிவாசி மக்கள் திருமணத்தை நாகரா, பெல்லகா என்கிற குலம் அடிப்படையில் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டின் முன்பு தடி மற்றும் குடையை வைத்து செல்வர். ஜாத்திக்காரர்' என்று அழைக்கப்படும் உறவினர்கள் மூலம் திருமணம் செய்யப்படுகிறது.


latest tamil news



இதில், செலவு முழுதும் மாப்பிள்ளை வீட்டாரை சேரும். வரதட்சணை வாங்குவதில்லை. விவாகரத்து என்றே இல்லை. பிரச்னை என்று வந்தால் ஜாத்திக்கார் எனப்படும் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்து சுமூக தீர்வு காணப்பட்டு வருகிறது. 265.25 ரூபாய் பணம் கட்டுதல் நிகழ்ச்சி நடத்தி, கிராமத்தில் உள்ள அனைவரின் வீட்டிற்கு சென்று ஆசி பெறுவர்.தற்போது அரசின் விதிமுறைப்படி முககவசம் அணிந்து பாரம்பரிய நிகழ்ச்சிநடத்தப்பட்டது.இவ்வாறு மணி கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X