உலக நாடுகளின் எரிசக்தி தேவையை இந்தியா பூர்த்தி செய்யும்

Updated : அக் 28, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (19) | |
Advertisement
புதுடில்லி:''உலக நாடுகளின் எரிசக்தி தேவையை, நாம் நிறைவு செய்யும் நிலை விரைவில் உருவாகும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.நம் நாட்டின் எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து, நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:கொரோனா பாதிப்பால், உலக நாடுகளின் எரிசக்தி தேவை, மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. மேலும் சில ஆண்டுகளுக்கு
உலக நாடு, எரிசக்தி, இந்தியா, பிரதமர் மோடி

புதுடில்லி:''உலக நாடுகளின் எரிசக்தி தேவையை, நாம் நிறைவு செய்யும் நிலை விரைவில் உருவாகும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


நம் நாட்டின் எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து, நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:கொரோனா பாதிப்பால், உலக நாடுகளின் எரிசக்தி தேவை, மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது.

மேலும் சில ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும் என, கருதுவதால் இத்துறையில் முதலீடுகள் குறைந்துள்ளன.நம் நாட்டில் எரிசக்தி நுகர்வு இருமடங்காக உயரும் என, கருதுவதால், மாசற்ற மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் கவனம் செலுத்துகிறோம்.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் வாயிலாக, 2022ம் ஆண்டில், 175 ஜிகாவாட் மின் உற்பத்தியை எட்டும் இலக்கிற்கான பணிகளை, நாம் நிறைவு செய்துள்ளோம். இதனால், குறைந்தபட்ட கார்பன் கழிவை வெளியேற்றும் நாடாக, நாம் உருவெடுப்போம்.

மத்திய அரசின் சார்பில், கடந்த ஐந்து ஆண்டுகளில் எரிசக்தி துறையில் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளால், உலகின் எரிசக்தி தேவையை நிறைவு செய்யும் இடத்திற்கு, நாம் பயணித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SMSuresh - chennai,யுனைடெட் கிங்டம்
27-அக்-202019:51:02 IST Report Abuse
SMSuresh first give electricity to tamilnadu
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
27-அக்-202018:56:27 IST Report Abuse
babu அதாவது இந்தியாவிலுள்ள கார்பொரேட்கள். ஆனால் அதற்கு ஏன் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் பிரதமர் விளம்பரம் கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
பொறியாளன் இளங்கோ எரிசக்தி என்பது உலக அரசியல். இங்கே ஆயிரம் கணக்கில் எரிசக்தி இல்லாமல் வாகனத்தை இயக்க வழிகள் உள்ளன. இன்னும் எரிசக்தி என்னும் கோட்பாடை பயன்படுத்தினால் இந்தியாவின் பொருளாதாரம் நிச்சயம் முன்னேற வாய்ப்பே இல்லை ஏனென்றால் இங்கே இருக்கும் மக்கள்தொகை. எரிசக்தி என்ற கோட்பாடை உடைத் தெறியும் புதிய ஆயிரம் கணக்கான இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் தினந்தோனும் வந்துக் கொண்டே தான் இருக்கிறது ஆகையால் இன்னமும் எரி சக்தி வேண்டாம் மாறாக உந்து சக்தியே வேண்டும்..இன்னமும் இந்தியா தனது பழைய 60 ஆண்டு கால அரசியலில் மூழ்கினால், மாற்றம் கனவே.. தயவு செய்து எரி சக்தியை மறப்போம் உந்து சக்தியை ஏற்போம். (உந்து சக்தி என்பது கச்சா எண்ணையை தவிர்த்து மின்சாரம், சாண எரிவாயு, தண்ணீர் மூலமும் சூரிய சக்தி மூலமும் பயன் படுத்த கூடியவை இதனால் காற்று மாசுக்கு தடை மட்டுமே)..புதிய கண்டுப்பிடுப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முன்னுரிமை வேண்டுகிறேன் தினமலர் ஆசிரியர்களே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X