தைவான் - அமெரிக்கா ஆயுத ஒப்பந்தம்; முட்டுக்கட்டை போடும் சீனா..!| Dinamalar

தைவான் - அமெரிக்கா ஆயுத ஒப்பந்தம்; முட்டுக்கட்டை போடும் சீனா..!

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (2)
Share
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தற்போது சீன-அமெரிக்க மோதல் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்க சீனா ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளது. முன்னதாக தீவு நாடான தைவானை தன் வசமாக்க நினைத்த சீனா கடந்த ஜூலை முதல் அங்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தற்போது சீன-அமெரிக்க மோதல் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்க சீனா ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளது.



latest tamil news



முன்னதாக தீவு நாடான தைவானை தன் வசமாக்க நினைத்த சீனா கடந்த ஜூலை முதல் அங்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்தது 'ஒரே நாடு' சட்டத்தை அமல்படுத்த முயன்றது. இதற்கு தைவான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவின் பிடியில் இருந்து தப்பிக்க தைவான் அமெரிக்காவின் உதவியை நாடியது.
எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற ரீதியில் தைவானுடன் அமெரிக்கா சமீபகாலமாக அதிக நட்பு பாராட்டியது. அமெரிக்க மாகாண செயலாளர் மைக் பாம்பியோ தவானுக்கு வருகை தந்தார். சீனாவை எதிர்க்க அமெரிக்கா குவாட் நாடுகள் ஒருங்கிணைப்பை பலப்படுத்த முயன்றது. மைக் பாம்பியோ தைவான் சந்திப்பின்போது தைவானின் பாதுகாப்பு கருதி முக்கிய ஆயுத சப்ளை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

இதன்படி அமெரிக்க ராணுவ ஆயுத தயாரிப்பு நிறுவனங்களான போயிங் கோ, லாக்ஹீட் மார்ட்டின் கார்ப்பரேஷன், ரேதியான் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் உள்ளிட்ட அமெரிக்க ராணுவ ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுடன் தைவான் தொழில் ஒப்பந்தம் இட்டது.
1.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் தைவானுக்கும் அமெரிக்காவுக்கும் ஆயுத வர்த்தக ஒப்பந்தம் இடப்பட்டது. இதனால் சீனா ஆத்திரம் அடைந்தது. இதனையடுத்து மேற்கண்ட இந்த மூன்று ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சீன அரசு பல தொழில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முன்னதாக போர்டு நிறுவனத்துக்கு சீன நிறுவனத்துடன் தொழில் ஒப்பந்தம் இட்டதால் அபராதம் விதித்தது.


latest tamil news



சீனாவின் இந்த நெருக்கடிகளை மீறி தங்கள் ஆயுத பலத்தை அதிகரித்துக் கொள்ள தைவான் தலைசிறந்த ஆயுதங்களை அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து வாங்குகிறது. எதிர்காலத்தில் சீனாவுக்கும் தைவானுக்கும் போர் மூண்டால் தங்களைத் தற்காத்துக்கொள்ள இந்த ஆயுதங்களை தைவான் பயன்படுத்த உள்ளது. சீனாவின் இந்த தொழில் அச்சுறுத்தல் அமெரிக்காவை அதிருப்தி அடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X