தோப்பு வாங்கிய செகரட்டரி; 'காப்பு' வாங்கும் அதிகாரி?

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020
Share
Advertisement
தெக்கலுாரிலுள்ள ஒரு தோழியின் வீட்டில் நடந்த விசேஷத்துக்கு சென்று, திரும்பி கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும்.அவிநாசி வழியே சென்றதால், லிங்கேஸ்வரரை வழிபட்டு, ஜில்லென காற்று வீசிய கோவில் வளாகத்தில் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்தி கொண்டனர்.''ஏங்க்கா... சபாநாயகர் போனவாரம் தொகுதி பக்கம் வந்துட்டு போயிருக்கார். ஏதும் விசேஷம் இருக்கா...''''அவருடைய ஆபீசில்
 தோப்பு வாங்கிய செகரட்டரி; 'காப்பு' வாங்கும் அதிகாரி?

தெக்கலுாரிலுள்ள ஒரு தோழியின் வீட்டில் நடந்த விசேஷத்துக்கு சென்று, திரும்பி கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும்.அவிநாசி வழியே சென்றதால், லிங்கேஸ்வரரை வழிபட்டு, ஜில்லென காற்று வீசிய கோவில் வளாகத்தில் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்தி கொண்டனர்.

''ஏங்க்கா... சபாநாயகர் போனவாரம் தொகுதி பக்கம் வந்துட்டு போயிருக்கார். ஏதும் விசேஷம் இருக்கா...''

''அவருடைய ஆபீசில் மக்கள்கிட்ட இருந்து மனு வாங்க, கட்சிக்காரங்க ஏற்பாடு செஞ்சாங்க. கொஞ்சம் கூட சமூக இடைவெளி இல்லாம திரண்டு வந்த கூட்டத்த பாத்து, மிரண்டுபோன சபா, ஆபீசிக்குள்ள போகாம, வெளிய'சேர்' போட்டு உட்கார்ந்துட்டாரு. கொரோனா வந்துடுமோன்னு பயந்து, கூட்டத்துல சிக்காம கட்சிக்காரங்க பல பேரு ஒதுங்கியே நின்னாங்களாம்,''

''கொரோனா பயம் எல்லாரையும் ஆட்டுவிக்குதுங்க்கா...'' சொன்ன மித்து, ''அக்கா, போனவாரம் பத்திரப்பதிவு ஆபீசில் ரெய்டு நடந்ததை பத்தி பேசினோமில்ல. அதைப்பத்தி நேத்து ஒருத்தர் புதிய விஷயம் சொன்னார். 'எப்ப ரெய்டு நடந்தாலும், பெரிய ஆபீசர் லீவு போட்டுடுவாராம். அதெப்படினு, எல்லாருமே பேசறாங்க,''

''நெருப்பில்லாம புகையுமாடி'' என்று சொன்ன சித்ரா, ''நாலு நாளைக்கு முன்னாடி, பைபாஸ் ரோட்டுல, போலீஸ் ரோந்து போயிருக்காங்க. ரோட்டோரம் நின்னுட்டிருந்த காரில் இருந்த ஒரு ஜோடியை பார்த்து, அதிர்ச்சியடைஞ்சு திரும்பி வந்துட்டாங்களாம்,'' என, புதிர்போட்டவாறே, 'வாட்ஸ்அப்'பில் வந்த கூத்தனுார் சரஸ்வதி தேவியின் படத்தை எடுத்து கண்ணில் ஒத்தி கொண்டாள்.

''அட இப்டியும் நடக்குதுங்களா,'' ஆச்சரியப்பட்ட மித்ரா, ''அப்ப பாரதி சொன்னது என்னாச்சுங்க?'' என ஆதங்கப்பட்டவாறே, ''சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்கலை,'' என்றாள்.

''புதிர் போடாம புரியும்படியா சொல்லுடி?''''அக்கா... அவிநாசியில, பிரபலமான பெருமாள் கோவில் உள்ள பஞ்சாயத்தில, கோர்ட் ஊழியர் ஒருத்தர், ரெவின்யூ சர்டிபிகேட் கேட்டதற்கு, 2 ஆயிரம் குடுத்தாதான், கெடைக்கும்,னு கறாரா சொன்னாராம் அங்கிருந்தவர். ஆனா, அவருக்கு மேலுள்ளவரே, 'சரி, கவர்மென்ட் ஸ்டாப்புன்னு சொல்றீங்க. வாங்கிட்டு போங்கன்னு சொல்லியும், தர்றதுக்கு அப்படி யோசிச்சாராம்,'' மித்ரா விளக்கினாள்.

திடீரென்று ஓடிய குழந்தையை துரத்திய தாய், 'தம்பி ரகு ஓடாதே நில்லு. எத்தனை தடவ சொல்றது. இப்டி பண்ணாதேன்னு,' சத்தம் போட்டார்.

அதனை வேடிக்கை பார்த்தவாறே, ''பல்லடம், ஆறாக்குளம் கிராமத்துல, நுாத்துக்கணக்கான யூனிட் மண் அள்ளுனதா அதிகாரிக்கு பப்ளிக் ஒருத்தர் கம்ப்ளைய்ண்ட் செஞ்சாரு. சில நிமிஷம் கழிச்சு காண்ட்ராக்டர் ஒருத்தர் கம்ப்ளைண்ட் பார்ட்டிக்கு போன் பண்ணி, 'சார்... இத பெருசு பண்ண வேணாம். 'அட்ஜஸ்மென்ட்ல' தான் மண் எடுக்குறோம்ன்னு சொல்லி இருக்காரு,'' என்றாள் சித்ரா.

''அதிகாரிகளே இப்படி இருந்தா... யார் கிட்ட கம்ப்ளைன்ட் பண்றதுன்னு சொல்லி, அந்த 'சிவசுப்ரமணியத்துக்கே' வெளிச்சம்னு புலம்பிட்டு போனை வச்சிருக்காரு...''

''அதே ஊரில், இன்னொரு மேட்டரும் இருக்குடி. '..வாய்' பஞ்சாயத்துல, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்த, செகரட்டரி கடை கட்டி வாடகைக்கும் விட்டுருக்காரு''

''செகரட்டரிக்கு அவ்வளவு சம்பளம் வருதா?'' என மித்ரா வாய் பிளக்க, ''ஹூம்...யாருடி நீ, புரியாத ஆளா இருக்க. தண்ணி பைப் ரிப்பேர் செஞ்சதா கணக்கு எழுதி, அதுலயே தோப்பு வாங்கி இருக்காறாம். இதை செய்த அவருக்கு காம்ப்ளக்ஸ் கட்ட முடியாதா என்ன?'' என்றாள் சித்ரா.

''இவங்க பண்ற அக்கிரமத்தை, மேலிருந்து 'சிவசாமி' பார்த்துகிட்டுத்தான் இருக்கார்,''

''இதைவிட இன்னொரு முக்கியமான மேட்டர் என்னன்னா... தங்களுக்கு அனுசரிச்சு போகாத ஆபீர்சகளை மாத்தியாகணும்னு, சில வி.ஏ.ஓ.,ங்க, அவங்க சங்கத்தோட உதவிய கேட்டிருக்காங்களாம். அவங்களும் கங்கணம் கட்டி, களத்தில இறங்கி, சிலரை 'கட்டம்' கட்டிட்டாங்களாம்,''

''துறை ரீதியா விசாரணை நடத்தினா சாயம் வெளுக்கும்; நம்ம கலெக்டர் செய்வாரான்னு தான் தெரியல...'' என, புலம்பியபடி சிட்டியை நோக்கி இருவரும் புறப்பட்டனர்.

''தேர்வாணையம் மூலமா வேலைக்கு வர்றவங்க கூட போஸ்டிங் வாங்க பணம் செலவு பண்றாங்கலாமே...'' 'சைடு மிரரை' பார்த்தவாறு கேட்டாள் சித்ரா.

''ஆமாங்க்கா. உடுமலையில, ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல, பழநிய சேர்ந்த 'ராம' நாம பேர் கொண்ட 'வட்ட' ஆபீசரு, அதே ஊர்ல தான் போஸ்டிங் வேணும்னு அடம்பிடிச்சு வந்திருக்காராம். கவனிக்கிறவங்கள பலமா 'கவனிச்சு'ட்டு தான் வந்திருக்காருனு பேச்சு அடிபடுது,'' என்றாள்.

அவிநாசி ரோட்டில், வாகனங்கள் வரிசை கட்டி நிற்க, காற்றுக்கு அறுந்து விழுந்த மின்கம்பியை இழுத்து கட்டிக் கொண்டிருந்தனர் மின்வாரிய ஊழியர்கள். வண்டியை ஓரங்கட்டி, அருகே இருந்த காபிஷாப் ஒன்றில், ஆர்டர் செய்து, சேரில் உட்கார்ந்தனர்.

''லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டால இ.பி.,காரங்க 'ஷாக்'காகி இருக்காங்களாம்'' என்றாள் சித்ரா.

''ஆமாங்க்கா. போனவாரம் நல்லுார் இ.பி., ஆபீசில் விஜிலன்ஸ் ரெய்டு நடந்தது. அதிகாரிகிட்ட இருந்து, கணக்கில் வராத ரெண்டு லட்சம் ரூபாய் புடிச்சிட்டாங்க. அப்போது போலீஸ் அதிகாரிகிட்ட பேசிய ஒரு அலுவலர், 'சார், இங்க மட்டுமில்ல. 'பாத்திரம்' செய்யும் பாளையத்து ஊரில் உள்ள ஆபீசர், இவரை விட கல்லா கட்றதுல கில்லாடி,'ன்னு சொல்லிட்டாராம்,'' என்றாள் மித்ரா.

அப்போது, சித்ராவின் மொபைல் போன் ஒலிக்கவே, ''ஹலோ... யார் பேசறது. நாச்சிமுத்து அண்ணனா? இருங்க வீட்டுக்கு போய் கூப்பிடறேன்,'' என சொல்லி அணைத்தாள்.

ஆவி பறக்க வந்த காபியை ருசித்து கொண்டே, ''தீபாவளி டைம் வந்துடுச்சுல்ல. இனி விஜிலென்ஸ் போலீஸ்காரங்க உஷாராத்தான் இருப்பாங்க. போன வருஷம், கலால் துறை ஆபீசில் நடந்த ரெய்டுல பல பேரு கையும், களவுமாக சிக்கினாங்க. ஆனா, அவங்க மேல என்ன நடவடிக்கை எடுத்தாங்கன்னு தான் தெரியல,'' என்றாள் சித்ரா.

''நார்த் தாலுகா ஆபீஸ்க்கு, ஆதார், ரேஷன் கார்டு கேட்டு, நிறைய பேர் வர்றாங்க. இ--சேவை மையத்தில் வேலை பாக்கறவங்க, டோக்கன் சிஸ்டம் பாலோ பண்றாங்க. ஆபீஸ் வளாகத்துல இருக்கிற புரோக்கர்ங்க, நிறைய பேத்துக்கு டோக்கன் கொடுத்தீங்கன்னா நாங்க எப்படி பிழைக்கிறது,''

''அதனால, கொஞ்சம் பேருக்கு டோக்கன் கொடுத்து, நிறைய பேர எங்ககிட்ட வர மாதிரி செய்யுங்க. உங்களுக்கும் சேர்த்து கமிஷன் பண்ணி தர்றோம்னு, மிரட்டர தொணில, சொல்றாங்களாம். அதோடில்லாம, நார்த் இன்டியன் லேபர்கிட்ட, அப்ளிகேஷன் பூர்த்தி செய்ய, 500 ரூபா வரைக்கும் கறந்துடறாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''இந்தக்கூத்து எல்லா தாலுகா ஆபீஸ்லயும் தான் நடக்குதுங்க அக்கா...'' என்ற மித்ரா, பில் கொடுத்து விட்டு வெளியே வந்தாள்.டிராபிக் சரியானதால், இருவரும் கிளம்பினர்.

ஆயுதப்படை போலீசார், போக்குவரத்து சீரமைத்து கொண்டிருப்பாதை பார்த்த, சித்ரா, ''பெண் ஏ.ஆர்., போலீஸ்காரங்க தங்கியிருந்த கேம்பஸில், போலீஸ்காரர் ஒருத்தர், நடுராத்திரியில் சுவர் ஏறி குதிச்சு போனதா போன வாரம் பேசினோம்ல. அதனால, ரெண்டு போலீஸ்காரங்களை பாதுகாப்புக்கு போட்டுட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

குமரன் ரோட்டில், டிராபிக் அதிகமாக இருக்கவே, தடுமாறியபடியே வண்டியை ஓட்டினாள் சித்ரா.

அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, சபரி ரோட்ல டிராபிக் ஏற்படாம இருக்க, அந்த ரோட்ல வண்டிகள் போக தடை போட்டிருக்காங்க. அந்த ரோட்ல இருந்து, வெளியே வர மட்டும் தான் அனுமதிக்கிறாங்க,''

''ரொம்ப ஸ்க்ரிட்டா ரூல்ஸ் பாலோ பண்ண போலீஸ்காரங்க, நாலு நாளா 'சைலன்ட்' ஆகிட்டாங்களாம். இதனால, மறுபடியும் டிராபிக் ஜாம் ஆகுதாம். வண்டிங்க வராததால, பிசினஸ் பாதிக்குதுன்னு சொல்லி, ஒரு சில கடைக்காரர்கள் ஒன்று சேர்ந்து, 'கிப்ட் கூப்பன்' கவனிச்சிட்டாங்களாம்,'' என்றாள்.

''ஆமாண்டி... தேவை எதிர்பார்த்தது தான் சேவை பண்றாங்க. இதேபோல, தாராபுரத்தில் பெரிய போலீஸ் ஆபிசருக்கும், சின்ன ஆபீசருக்கும், யார் அதிகமா 'வேட்டை' நடத்தறுதுன்னு கடுமையான போட்டியாம். பெரிய ஆபீசர், கொஞ்ச நாளைக்கு முன்னாடி, வாடகைக்கு ஒரு காரை எடுத்துக்கிட்டு, சில போலீஸ்காரர்கள கூப்பிட்டுக்கிட்டு, சில்லிங் முறைல மது வித்துக்கிட்டு இருந்த, 10 பேர ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்திருக்காரு,''

''அதுல ரெண்டு பேரு மேல மட்டும் 'புட்டப் கேஸ்' போட்டுட்டு, மத்தவங்ககிட்ட இருந்து, தலைக்கு இவ்வளவுன்னு வசூல்பண்ணிட்டு அனுப்பிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

அதே வழியில் இருந்த, 'ஜெயம் கொண்ட ராமர்' கோவிலை பார்த்து ஒரு கும்பிடு போட்ட மித்ரா, ''அக்கா... கார்ப்ரேஷன் ஆபீசில், மக்களோட தொடர்பில் உள்ள அதிகாரி, எப்ப பார்த்தாலும், 'தொடர்பு எல்லைக்கு அப்பால்' இருக்கிறார். இதை தெரிஞ்சும் அதிகாரி கண்டுக்கறதில்லையாம்,'' என்றாள்.

''அப்ப அவரை 'காந்தி' கணக்குல வைடி,'' சிரித்த சித்ரா, ''குண்டான' ஸ்டேஷன் லிமிட்டில், சீட்டாட்ட கும்பலிடம், ஒரு லகரம் பறிமுதல் செஞ்சவங்க, வெறும் 15 ஆயிரத்தை மட்டும் கணக்கு காமிச்சிட்டாங்க. அதிலும் பாருடி, டூவீலர் வச்சிருந்தா 3 ஆயிரம், காருன்னா, 10 ஆயிரம்னு, வசூல் பண்ணிட்டாங்களாம்,'' என்று சொல்லியவாறு, மித்ராவை, அவள் வீட்டில் இறக்கி விட்டு புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X