கேரள தங்கக் கடத்தல் வழக்கு: முக்கிய குற்றவாளி கைது| Dinamalar

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (20)
Share
திருவனந்தபுரம் :கேரள தங்கக் கடத்தல் வழக்கில், முக்கிய குற்றவாளியான ராபின் ஹமீது கைது செய்யப்பட்டதாக, தேசிய புலனாய்வு நிறுவனம் நேற்று தெரிவித்தது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துாதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டது, சமீபத்தில்
Kerala gold smuggling case, NIA, arrests, accused

திருவனந்தபுரம் :கேரள தங்கக் கடத்தல் வழக்கில், முக்கிய குற்றவாளியான ராபின் ஹமீது கைது செய்யப்பட்டதாக, தேசிய புலனாய்வு நிறுவனம் நேற்று தெரிவித்தது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துாதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.இதில், துாதரகத்தின் முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.


latest tamil news



இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராபின்ஸ் ஹமீது, கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவனம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X