மல்லையாவின் 'சரக்கு' ஆலைக்கு மூடுவிழா?

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி : விஜய் மல்லையாவின் மதுபான நிறுவனத்தை முடக்கும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கர்நாடகாவைச் சேர்ந்த, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் இருந்து, 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்தும்
Vijay Mallya,Mallya, Supreme Court, SC, மல்லையா,விஜய் மல்லையா

புதுடில்லி : விஜய் மல்லையாவின் மதுபான நிறுவனத்தை முடக்கும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கர்நாடகாவைச் சேர்ந்த, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் இருந்து, 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகளில், மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, இது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம்,'விஜய் மல்லையாவின், 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம் செலுத்த வேண்டிய, 7,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை மீட்பதற்காக, அவரது, 'யுனைனட் பிரிவரீஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்' எனப்படும் மதுபான நிறுவனத்தை முடக்கவேண்டும்' என உத்தரவிட்டது.


latest tamil news


இதை எதிர்த்து, விஜய் மல்லையாவின் மதுபான நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கு விசாரணை, நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி கூறியதாவது:

மல்லையா மற்றும் அவரது நிறுவனத்திடம் இருந்து, 3,600 கோடி ரூபாய் மட்டுமே, மீட்கப்பட்டுள்ளது. 11 ஆயிரம் கோடி ரூபாய் மீட்கப்படவேண்டியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இதையடுத்து, மதுபான நிறுவனத்தை முடக்கும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
27-அக்-202019:27:16 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN பிரபலத்தின் பின்னனி கூட்டாளிகள் யார் என்பதை அறிந்து ஆய்வுசெய்தால் மேலும் பல உண்மைகள் வெளி வரும்
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
27-அக்-202016:06:19 IST Report Abuse
Amirthalingam Shanmugam மதுபான ஆலையை மூடவேண்டாம் ,அரசாங்கமே அதை எடுத்து நடத்தி மிச்ச தொகையை எடுத்துக்கொள்ளக்கூடாதா?அரசாங்கம் ,வங்கி மற்றும் குடிமகன் மூவருக்கும் பாதிப்பு இல்லை.?.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
27-அக்-202014:51:05 IST Report Abuse
r.sundaram எந்த ஒரு தொழிற்சாலையையும் மூடி விட்டால் அதன் மதிப்பு குறைந்த விடும். ஓடிக்கொண்டிருக்கும் தொழிற்ச்சலையை பலரும் வாங்க விரும்புவார்கள். மூடிய தொழிற்ச்சலை ஏலம் விட்டாலும் விலை போகாது. ஆதலால் தொழிற்ச்சலையை மூடுவது நல்லதல்ல. ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே விற்க முனைவதுதான் பணம் பார்க்கும் வழி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X