பொது செய்தி

இந்தியா

வட்டிக்கு வட்டி தள்ளுபடி; 75 சதவீதம் பேருக்கு பயன்

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
மும்பை : வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால், கடன் வாங்கியோரில், 75 சதவீதம் பேர் பயனடைவர் என தெரியவந்துள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், தொழில் நிறுவனங்கள் முடங்கின. ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்தனர். இதனால், வங்கிகளில் கடன் பெற்றோர், மாத தவணையான, இ.எம்.ஐ., செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, கடன் தவணைகள்
interest concession, EMI, lockdown, Banks, SC, Supreme Court

மும்பை : வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால், கடன் வாங்கியோரில், 75 சதவீதம் பேர் பயனடைவர் என தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், தொழில் நிறுவனங்கள் முடங்கின. ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்தனர். இதனால், வங்கிகளில் கடன் பெற்றோர், மாத தவணையான, இ.எம்.ஐ., செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, கடன் தவணைகள் மார்ச், 1 முதல் ஆகஸ்ட், 31 வரையிலான ஆறு மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், இந்த ஆறு மாத காலத்திற்கு வங்கிகள் வட்டிக்கு வட்டி விதித்தன.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த, 23ம் தேதி, உச்ச நீதிமன்றத்தில், 'இரண்டு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு, வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும்' என, மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது.


latest tamil news


அரசின் இந்த அறிவிப்பு குறித்து, 'கிரைசில்' என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கல்வி, வீடு, கிரெடிட் கார்டு, வாகனம், தனிநபர் கடன் உள்ளிட்டவற்றிற்காக பெறப்பட்ட இரண்டு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு, வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் வாயிலாக, 40 சதவீதம் கடன்களுக்கு, வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும். கடன் வாங்கியோரில், 75 சதவீதம் பேர் பயனடைவர். ஆனால், இதனால், 7,500 கோடி ரூபாய், மத்திய அரசுக்கு செலவாகும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
29-அக்-202016:49:21 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஓட்டு வங்கி அரசியல்....ஞாயமானவர்களுக்கு பயன்படனும். அனியாயகமாக செலவிடல் நன்மையல்ல...............
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
27-அக்-202019:46:35 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN வசதி வாய்ப்பு உள்ளவனுக்கே கடன் தருகின்றனர். தள்ளுபடியும் செய்கின்றனர் .இது வரியவனுக்கு பயன்ஏற்பட போவதில்லை. இதனால் கடன் பெற லஞ்சம் வேரூன்றுகிறது எனலாம்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
27-அக்-202007:52:17 IST Report Abuse
VENKATASUBRAMANIAN எங்கே RK கம்யூனிஸ்ட் அருணன் கனகராஜ் போனார்கள். வாய் கிழிய விவாதத்தில் பேசினார்கள். இப்போது வாயே திறக்க மாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X