அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது: முருகன்

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (59)
Share
Advertisement
சென்னை : ''பெண்களை இழிவுபடுத்திய திருமாவளவனுக்கு ஆதரவாக பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்படும்'' என தமிழக பா.ஜ. தலைவர் முருகன் கூறினார்.தமிழக பா.ஜ. தலைமையகத்தில்முருகன் அளித்த பேட்டி: ஹிந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் திருமாவளவன் பேசி உள்ளார். நாட்டில் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் தான் நடைமுறையில் உள்ளது. மனுஸ்மிருதி உட்பட வேறு
Murugan, MK Stalin, Stalin, DMK, BJP

சென்னை : ''பெண்களை இழிவுபடுத்திய திருமாவளவனுக்கு ஆதரவாக பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்படும்'' என தமிழக பா.ஜ. தலைவர் முருகன் கூறினார்.

தமிழக பா.ஜ. தலைமையகத்தில்முருகன் அளித்த பேட்டி: ஹிந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் திருமாவளவன் பேசி உள்ளார். நாட்டில் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் தான் நடைமுறையில் உள்ளது. மனுஸ்மிருதி உட்பட வேறு எதுவும் நடைமுறையில் இல்லை. நடைமுறையில் இல்லாத ஒன்றை தடை செய்ய கோருவது வேடிக்கையாக உள்ளது.


latest tamil news


பெண்களை இழிவுப்படுத்துவோருக்கு ஸ்டாலின் நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்காக பா.ஜ. மகளிர் அணியினர் தக்க நேரத்தில் தக்க பாடம் கற்பிப்பர். ஸ்டாலின் வெளியே நடமாடமுடியாத நிலை ஏற்படும்.

கருப்பர் கூட்டம் சேனல் நிர்வாகிகளுக்கு தி.மு.க. வழக்கறிஞர் அணியினர் உதவி செய்துள்ளனர். இதன் வாயிலாக அவர்களின் பின்னணியில் தி.மு.க. இருப்பது உறுதியாகி உள்ளது. இவற்றை எல்லாம் மக்களிடம் அம்பலப்படுத்தவே வேல் யாத்திரை மேற்கொள்ள இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
02-நவ-202011:45:04 IST Report Abuse
Malick Raja கூலிக்கு கருத்தெழுதுபவர்கள் தங்களின் கருத்துக்கள் மூலம் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள் என்பதை உணராமல் இருப்பதும் அறிவீனம்.. " L" முருகன் அல்லவா ..இப்படித்தான் சொல்வார் .. தமிழக பிஜேபி தலைவராக பழகுகிறார் அல்லவா ? அறிவு முதிர்ச்சியின் அளவீடு கசிகிறதால் இதுபோன்ற சொல்லாடல்கள் சகஜமே
Rate this:
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,ஆஸ்திரேலியா
28-அக்-202006:56:11 IST Report Abuse
Ramasami Venkatesan ஜெயலலிதா பெரும்பான்மையாக மகளிர் ஓட்டுகளால் ஜெயித்தார். இப்போ இந்த திருமா பேச்சினால் ஒட்டுமொத்த மகளிர் ஓட்டும் திமுகவுக்கு எதிராக இருக்க வேண்டும் அடுத்த தேர்தலில். பலவற்றிலும் மகளிர் கைகள் ஓங்குவதால், இந்த தேர்தலில், நாங்கள் மனது வைத்தால், என்ற ரீதியில், திமுகவை முற்றிலுமாக நிராகரித்து ஓட்டளிக்க வேண்டும். அப்போதுதான் திருமா பேச்சுக்கு பதிலடி கொடுத்தமாதிரி இருக்கும்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
27-அக்-202021:57:12 IST Report Abuse
S. Narayanan இனியும் தமிழர்கள் பொறுக்கமாட்டார்கள்.தமிழ் நாட்டில் பிறந்த அனைவரும் தமிழர்களே. அவர்களை குறை சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X