தாஜ்மஹாலில் காவிக் கொடி ஏற்றியதால் பரபரப்பு

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
ஆக்ரா: தாஜ்மஹாலில், கங்கை நீரை தெளித்து, காவிக் கொடியை ஹிந்து அமைப்பினர் ஏற்றியதால், பரபரப்பு ஏற்பட்டது.உ.பி., மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு, 'ஹிந்து ஜக்ரான் மன்ச்' என்ற ஹிந்து அமைப்பின் மாவட்ட இளைஞர் அணி தலைவர் கவுரவ் தாகூர் வந்தார்.கங்கை நீர்அவருடன், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் மன்வேந்திர சிங் மற்றும் விஷ்வேஷும் உடன் வந்தனர். கிழக்கு வாயில் கதவு வழியாக
ganga_jal, hoist_saffron_flag, Taj Mahal

ஆக்ரா: தாஜ்மஹாலில், கங்கை நீரை தெளித்து, காவிக் கொடியை ஹிந்து அமைப்பினர் ஏற்றியதால், பரபரப்பு ஏற்பட்டது.

உ.பி., மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு, 'ஹிந்து ஜக்ரான் மன்ச்' என்ற ஹிந்து அமைப்பின் மாவட்ட இளைஞர் அணி தலைவர் கவுரவ் தாகூர் வந்தார்.கங்கை நீர்அவருடன், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் மன்வேந்திர சிங் மற்றும் விஷ்வேஷும் உடன் வந்தனர். கிழக்கு வாயில் கதவு வழியாக நுழைந்த அவர்கள், பாட்டில் ஒன்றில், கங்கை நீரை நிரப்பி, அதை தாஜ்மஹாலுக்குள் தெளித்தபடி சென்றனர்.

இதன்பின், தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள பார்வையாளர் இருக்கை அருகே நின்று, காவிக்கொடியை துாக்கிக் காட்டினர். இந்த காட்சிகள் அடங்கிய, 'வீடியோ', சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, அங்கிருந்த சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், அவர்களை அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள், தாங்கள் இங்கு பூஜை செய்ய வந்ததாகவும் தெரிவித்தனர்.


latest tamil news




சர்ச்சை:


ஒரு மணிநேரம் நடந்த விசாரணைக்குப் பின், சி.ஐ.எஸ்.எப்., அதிகாரிகள், அவர்களை எச்சரித்து அனுப்பினர். தாஜ்மஹாலில், வலதுசாரி அமைப்பினர், சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபடுவது, இது முதன்முறை அல்ல. கடந்த, 2008ல், தாஜ்மஹாலுக்குள், ஹிந்து மத சடங்குகளை, சிவசேனா கட்சியினர் செய்தனர். 2018ல், பெண்கள் சிலர், தாஜ்மஹாலில் உள்ள மசூதிக்குள் பூஜைகள் நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-அக்-202023:39:29 IST Report Abuse
தமிழவேல் எப்படி உள்ளே அனுமதித்தார்கள் ? அவ்வளவு சுலபமில்லையே....
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
27-அக்-202013:48:29 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam "கந்தைக் காவி உடை தரித்து மேனியெல்லாம் வெண்ணீறணிந்து, சிவனை உளத்தில் போற்றி மெய்ஞானத்தைப் பெற்றனரே. முனிவர்கள் ஞானக் களஞ்சியமே அவர் சொன்னவையாவும் மெய்ஞானங்களே" துறவறம் கொள்பவரே காவி அணிவர்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-அக்-202023:45:26 IST Report Abuse
தமிழவேல் நீங்க வேற சார், இப்போ எல்லா சிலைக்கும், போட்டோவுக்கும் காவி சுத்திகிட்டு இருக்கானுவோ.... பாவம், படேல், நேதாஜி, வள்ளுவர், விவேகானந்தர்................. இப்புடியே சொல்லிகிட்டே போகலாம். எப்படியாவது கூட்டம் சேர்த்தாகனுமே.. நேருக்கு கூட சுத்துனாலும் ஆச்சரிய படுறதுக்கில்ல....
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
27-அக்-202013:33:55 IST Report Abuse
Amirthalingam Shanmugam எப்பவும் ஒரு கூட்டம் புதைக்கப்பட்ட பிணங்களையே தோண்டிக் கொண்டேயிருப்பது வாடிக்கையாகிவிட்டது.வீணர்களின் இந்த இழிசெயலால் நாட்டுக்கோ அல்லது மக்களுக்கு ஒரு பயனுமில்லை. இதுபோல் செயலில் ஈடுபடுபவர்களால் உலக அரங்கில் இந்தியர்களுக்கு தலைகுனிவு.
Rate this:
Prabhagharan - Madurai,ஓமன்
27-அக்-202014:12:40 IST Report Abuse
Prabhagharanபயன் இருக்கின்றது, இல்லையென்றால் அமிர்தலிங்கம் இன்று அமீர் என்று பெயர் பெற்று முன்னாள் ஹிந்துவாகி இருப்பீர்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X