நிரவ் மோடியின் ஜாமின் மனு 7வது முறையாக தள்ளுபடி

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
லண்டன்: பிரிட்டனில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமின் மனு, அந்நாட்டு நீதிமன்றத்தில் ஏழாவது முறையாக, நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்ட, பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி ஓடினார்.மத்திய அரசின் முயற்சியால், கடந்த
PNB fraud case, Nirav Modi, bail_request, reject, UK judge,

லண்டன்: பிரிட்டனில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமின் மனு, அந்நாட்டு நீதிமன்றத்தில் ஏழாவது முறையாக, நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்ட, பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி ஓடினார்.மத்திய அரசின் முயற்சியால், கடந்த ஆண்டு, பிரிட்டனின் லண்டனில் கைதான நிரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகியோர், அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


latest tamil news



கடந்த ஆண்டு நிரவ் மோடி தரப்பில் நான்கு முறை தாக்கல் செய்த ஜாமின் மனுக்களை, லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.லண்டன் உயர் நீதிமன்றமும், அவரது இரு மனுக்களை விசாரித்து, ஜாமின் வழங்க மறுத்தது. இந்நிலையில், நிரவ் மோடி தரப்பில் ஏழாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவும், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நேற்று தள்ளுபடி ஆனது.

மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றம் சி.பி.ஐ., தரப்பில், பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், நிரவ் மோடிக்கு ஜாமின் மறுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
27-அக்-202014:49:03 IST Report Abuse
Indhuindian விடாதீங்க எப்படி பேங்க் கொள்ளையில் கின்னஸ் ரெக்கார்டு பண்ணீணீங்களோ அந்த மாதிரி மீண்டும் மீண்டும் பெயில் கேட்டுகிட்டே இருங்க இதினெட்டாவது முறையா கேட்டா அதுக்கு அப்புறம் யாரும் முகமது கஜினியை யாரும் ஞாயபகம் வெச்சுக்க மாட்டாங்க வுண்களைதான் சொல்லுவாங்க
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
27-அக்-202010:38:50 IST Report Abuse
Ellamman நீரவ் மோடி... லலித் மோடி..... தேடப்படும் குற்றவாளிகளின் பெயர் ஒற்றுமை புல்லரிக்கவைக்கிறது... இந்த லிஸ்டுடன் வேறு பெயரை யாரும் சேர்த்துக்கொள்ளவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....
Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
27-அக்-202016:54:23 IST Report Abuse
Yaro Oruvanபேர பாத்து இவன் நம்ம கும்பல்னு (ஐ மீன் நம்ம மதம்னு) ஒத்தாசை செய்ரது யாருன்னு எல்லாருக்கும் தெரியும்.. நாங்க செயலை மட்டுமே பார்ப்போம்.. ஒனக்கு அது புரிய வாய்ப்பில்லை.. ஜைஹிந் - இத சொன்னாலே ஒங்க கும்பலுக்கு கோவம் வருமே?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X