ராணி வீட்டை சுத்தப்படுத்த ரூ.18.5 லட்சம் சம்பளம்| Dinamalar

ராணி வீட்டை சுத்தப்படுத்த ரூ.18.5 லட்சம் சம்பளம்

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (7)
Share
லண்டன் : ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி, இரண்டாம் எலிசபெத்தின் அரண்மனையை சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளர் பணிக்கு, 18.5 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.பிரிட்டனின் ராணி, இரண்டாம் எலிசபெத்துக்கு சொந்தமாக, வின்ட்சர் நகரில், 'வின்ட்சர் கேசில்' என்ற அரண்மனை உள்ளது. இங்கு, தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு, சமீபத்தில் விளம்பரம்
Royal Family, Windsor Palace, housekeeping job

லண்டன் : ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி, இரண்டாம் எலிசபெத்தின் அரண்மனையை சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளர் பணிக்கு, 18.5 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

பிரிட்டனின் ராணி, இரண்டாம் எலிசபெத்துக்கு சொந்தமாக, வின்ட்சர் நகரில், 'வின்ட்சர் கேசில்' என்ற அரண்மனை உள்ளது. இங்கு, தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு, சமீபத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



'குறைந்தபட்ச சம்பளமாக, 18.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். வேலைக்கான முறையான பயிற்சியும் அளிக்கப்படும். அரண்மனையை தூய்மைபடுத்துவது, உள்அலங்காரப் பொருட்களை பராமரிப்பது போன்றவை செய்ய வேண்டும்' என, அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.இது மாத சம்பளமா, ஆண்டு சம்பளமா என்பது தெரியவில்லை.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X