மயிலாப்பூர் : மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், குழுவாக நடந்து சென்று, மக்களின் குறைகளை, போலீசார் கேட்டறிந்து வருகின்றனர்.
சென்னையில், நாளுக்குநாள் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை, காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி, 'காவல் துறை உங்கள் நண்பன்' என நிரூபிக்க, சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், புது முயற்சியை மேற்கொண்டுள்ளார்அதன்படி, அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், போலீசார் குழுவாக நடந்து சென்று, மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.சென்னை, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் பகுதிகளில் உதவி கமிஷனர், ஆய்வாளர் தலைமையில், ஐந்து பேர் குழுவாக, போலீசார் தினமும், ஒவ்வொரு பகுதியாக பிரித்து, மாலை நேரங்களில், ஒன்று முதல் இரண்டு மணி நேரம் நடந்து செல்கின்றனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட், கடை வீதிகளில் வியாபாரிகளின் பிரச்னைகளை கேட்டறிவதுடன், குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று, மக்களை நேரடியாக சந்தித்து, குறைகளை கேட்கின்றனர்.மேலும், மது அருந்தி சாலையில் சுற்றுவோர், குழுவாக நின்று அரட்டை அடிப்போர் மற்றும் சந்தேக நபர்களை கண்டறிதல், முக கவசம் அணியாதவர்களை எச்சரிக்கை செய்தல் போன்ற, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE