பொது செய்தி

இந்தியா

இந்திய, அமெரிக்க அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020
Share
Advertisement
புதுடில்லி: இந்தியா, அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்களின் மாநாடு, டில்லியில் இன்று(அக்.,27) நடக்கிறது. இதில், சீனா தொடர்பான பிரச்னைகள் எழுப்பப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வர்த்தகப் போர்:இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்களின் மாநாடு, 2018ல் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.
India, US, Ministerial dialogue, இந்தியா, அமெரிக்கா, பேச்சுவார்த்தை

புதுடில்லி: இந்தியா, அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்களின் மாநாடு, டில்லியில் இன்று(அக்.,27) நடக்கிறது. இதில், சீனா தொடர்பான பிரச்னைகள் எழுப்பப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


வர்த்தகப் போர்:


இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்களின் மாநாடு, 2018ல் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. மூன்றாம் மாநாடு, டில்லியில் இன்று நடக்க உள்ளது. இதில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் பங்கேற்கின்றனர். இந்திய தரப்பில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கின்றனர்.

இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து உள்ளது. மேலும், தென் சீனக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் சீனா, பல நாடுகளின் எல்லையை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேபோல், சீனா - அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது. அதனால், அமைச்சர்கள் இடையேயான மாநாட்டின்போது, சீனா உடனான பிரச்னைகள் குறித்து பேசப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில், நவ., 3ல் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அமெரிக்க அமைச்சர்களின் வருகை, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


latest tamil news




வலுவான நாடு:


''இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள், இந்தோனேஷியாவுக்கான என் பயணம் துவங்கி உள்ளது. ''சிறப்பு வாய்ந்த கூட்டாளிகளுடனான தொடர்பை வலுப்படுத்தவும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தவும் இந்தப் பயணம் உதவும் என்று நம்புகிறேன்,'' என, மைக் போம்பியோ கூறியுள்ளார்.

இதற்கிடையே, டில்லியில் நேற்று, அமெரிக்க ராணுவ அமைச்சர் எஸ்பர், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அப்போது, சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் குறித்து, அமெரிக்க ராணுவ அமைச்சரிடம், ராஜ்நாத் சிங் விரிவாக எடுத்துரைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X