-'தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால், 'நீட்' தேர்வில் சாதிக்கலாம். பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களை புரிந்து படித்தாலே, வெற்றி எளிதாகி விடும்' என, தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், நம்பிக்கை தருகின்றனர்.மாற்றுத்திறனாளியான நான், திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 2019 - 20ம் ஆண்டு, பிளஸ் 2 படித்து, கடந்த மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுதினேன்.
பின், வகுப்பு ஆசிரியர்கள் கொடுத்த உத்வேகத்தால், 'நீட்' தேர்வு எழுதினேன்.தேர்வுக்கு தேவையான புத்தகங்களை, சென்னையைச் சேர்ந்த மருத்துவர் பிரசாத் வாங்கி கொடுத்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மாணவர்கள், எனக்கு நீட் தேர்வுக்கான, 'டிப்ஸ்' மற்றும் பாடம் நடத்தினர். மேலும், திருவள்ளூர் மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், எனக்கு தேவையான கேள்வி தாள் மற்றும் பல உதவிகளை செய்தார்.பயிற்சி மையத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே படித்து, நீட் தேர்வில், 201 மதிப்பெண்கள் பெற்றேன். மருத்துவராகி பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே, என் லட்சியம். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு இருந்தால் நீட் தேர்வில் எளிதில் சாதிக்கலாம்.
நீட் தேர்வு பற்றி மாணவர்கள் கவலை வேண்டாம். என் தந்தை சுனில்குமார் விவசாய கூலி, தாய் சங்கீதா இல்லத்தரசி. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள எனக்கு, அரசு சீட் வழங்கி, நிதியுதவி செய்தால், நானும் மருத்துவராகி ஏழைகளுக்கு சேவை செய்வேன் .கே.எஸ்.கிஷோர்குமார், 201/720 காபூர்கண்டிகை கிராமம், நொச்சிலி ஊராட்சி, திருவள்ளூர்என் தந்தை, பெருநகர் ஊராட்சியில் பம்ப் ஆப்பரேட்டராக பணி புரிகிறார். பிளஸ் 1 படிக்கும்போதே, அரசு சார்பில் நடந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்றேன். பிளஸ் 2 தேர்வுடன், 'நீட்' தேர்வுக்காகவும் படித்து வந்தேன். எங்கள் பள்ளி தலைமை ஆசிரியையின் வழிபாட்டுதலும், ஆசிரியர்களின் ஊக்குவிப்பும், முதல் முயற்சியிலேயே, 'நீட்' தேர்வில் வெற்றி பெற ஏதுவாக அமைந்தது.
நமக்கு தெரிந்த விடைகளை மட்டும் எழுதிவிட்டு, தெரியாத வினாக்களை, 'ஸ்கிப்' செய்தாலே, 'மைனஸ்' மதிப்பெண் பெறாமல், நீட் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.எம்.பாரதி, 150 / 720அரசு முன் மாதிரி மேல்நிலைப்பள்ளி,பெருநகர், உத்திரமேரூர்.என் தந்தை தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிகிறார். பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, நீட் தேர்வுக்காக, தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்கும் அளவிற்கு எங்களுக்கு வசதி இல்லை. எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் வழிகாட்டுதலின்படி, பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களை பொதுத்தேர்வுக்கு படிக்கும்போதே, நீட் தேர்வுக்காகவும் நன்றாக படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, படிப்பை தொடர முடியவில்லை. என் படிப்பு செலவுக்கு யாராவது உதவி செய்தால், டாக்டராக வேண்டும் என்ற, என் லட்சியம் நிறைவேறும்.ஏ.தனலட்சுமி, 165 / 720அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,பெரிய காஞ்சிபுரம்பாடத் திட்டங்களை திரும்ப திரும்ப படித்து, அதிகளவில் பயிற்சி எடுத்தால், நிச்சயம் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.என்னுடைய மதிப்பெண்ணிற்கு, தற்போது மருத்துவம் படிக்க வாய்ப்பில்லை. மருத்துவம் தொடர்புடைய பட்டப்படிப்பு படித்து, மீண்டும், 'நீட்' தேர்வுக்கும் பயிற்சி பெற உள்ளேன். திறமை இருப்பவர்கள் நிச்சயம், 'நீட்' தேர்வில் எளிதாக சாதிக்கலாம். 'நீட்' தேர்வு தரமான மருத்துவர்களை உருவாக்கும்.
பா.செந்தமிழ்செல்வி, 207/720பொன்னேரிநீட் தேர்வுக்கு எந்த கோச்சிங் வகுப்புகளுக்கும் நான் செல்லவில்லை. இந்த தேர்வுக்கு, பெரும்பாலான கேள்விகள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடங்களில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன. என்னுடைய அப்பாவின் துாண்டுகோல் காரணமாக, நீட் தேர்வு எழுதினேன். இம்முறை மதிப்பெண் குறைந்தாலும், அடுத்த முறை தேர்வெழுதி, முயற்சிப்பேன். நான் தேர்ச்சி பெற்றதே மகிழ்ச்சி தான். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன், அடுத்த முறையும் முயற்சிப்பேன்.எஸ்.ரம்யா, 140/720சிறுநல்லுார், செய்யாறு தாலுகா, திருவண்ணாமலைநீட் தேர்வு குறித்து முதலில் பயம் இருந்தது. தேர்வு எப்படி இருக்கும் என, முதலில் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தேன். ஆனால், தேர்வு எழுதியபோது எளிமையாக இருந்தது. வேதியியல் தவிர, மற்ற பாடங்களில் இருந்து கேள்விகள் எளிமையாகவே கேட்கப்பட்டிருந்தன. நான் தேர்ச்சி பெற்றது எதிர்பார்க்கவில்லை. நீட் தேர்வு கடினமாக இருக்கும் என தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், அவ்வாறு இல்லை. நான் எந்த கோச்சிங் வகுப்புகளுக்கும் செல்லாமல், வீட்டிலிருந்து தான் படித்தேன். கோச்சிங் வகுப்புகளுக்கு சென்றிருந்தால், இன்னும் அதிக மதிப்பெண் எடுத்திருப்பேன். அடுத்த முறை முயற்சிப்பேன்.பி.லோகேஸ்வரன், 120/720அவலுார், காஞ்சிபுரம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE