பொது செய்தி

தமிழ்நாடு

தேசபக்தியுடன் வாழ்ந்தவர் ராமகோபாலன்: மோகன் பகவத் புகழாரம்

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
கோவை : ''நான், எனது என்ற எண்ணங்களே வராமல், தேசபக்தியுடன் வாழ்ந்தவர் ராமகோபாலன்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், புகழஞ்சலி செலுத்தினார்.ஹிந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலனுக்கு, 'சிரத்தாஞ்சலி' நிகழ்ச்சி, கோவை சின்மயா சர்வதேச உறைவிடப் பள்ளியில் நேற்றிரவு நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: ஹிந்துக்களை எவரும் கேவலமாக எண்ணிவிடக் கூடாது
Ramagopalan, Mohan Bhagwat, RSS, ராமகோபாலன், மோகன் பாகவத்

கோவை : ''நான், எனது என்ற எண்ணங்களே வராமல், தேசபக்தியுடன் வாழ்ந்தவர் ராமகோபாலன்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், புகழஞ்சலி செலுத்தினார்.

ஹிந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலனுக்கு, 'சிரத்தாஞ்சலி' நிகழ்ச்சி, கோவை சின்மயா சர்வதேச உறைவிடப் பள்ளியில் நேற்றிரவு நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: ஹிந்துக்களை எவரும் கேவலமாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவும், சமூக ஒற்றுமைக்காகவும் வாழ்ந்தவர் ராமகோபாலன். ஹிந்துக்கள் எப்படி இருக்க வேண்டும்; எப்படி உயர வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். தன் கடுமையான உழைப்பால், சமுதாயத்தை ஒருங்கிணைத்தவர்.


latest tamil news



கடும் பணிச்சுமையிலும், விவேகம், எளிமை, பணிவை அவரது அடையாளமாக கொண்டு இருந்தார். அவருடன் அறிமுகமாகும் நபர்கள், முதல் சந்திப்பிலேயே நெருக்கமாகிவிடுவர். ஹிந்து சமுதாயம் குறித்த, அவரது பேச்சுகள் உற்சாகம் தரும் வண்ணம் இருந்தன. கடந்த, 1947ல் முழுநேர பிரசாரகராக அவர் வந்த கால கட்டம், கல்லை உடைப்பது போல மிகக் கடுமையானதாக இருந்தது. ஆனால், தன் உடல், மனம், செயலால் முழுமையாக இறைபணிக்கான பண்புகளுடன் வாழ்ந்தார்.

எடுத்த காரியத்தை வெற்றி பெறச் செய்து, சாதித்து காட்டியவர். நான், எனது என்ற எண்ணங்களே வராமல் தேசபக்தியுடன், பணிவு நிறைந்த வாழ்க்கையை பின்பற்றினார். சமுதாயத்துக்காக உழைக்கும் எண்ணற்ற தேசபக்தர்களை உருவாக்கினார். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறவோன் - Chennai,இந்தியா
27-அக்-202017:17:49 IST Report Abuse
அறவோன் இந்த கும்பலின் தேசபக்தி உலகறிந்தது
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
27-அக்-202017:16:46 IST Report Abuse
அறவோன் என்ன தேசபக்தி?
Rate this:
Cancel
27-அக்-202016:12:26 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) நல்லவர்கள் மக்கள் மனதில் என்று நிலைத்து இருப்பார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X