அமெரிக்க அதிபர் தேர்தல்; 5.87 கோடி தபால் ஓட்டுகள் பதிவு

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில், இதுவரை, 5.87 கோடி பேர், தபால் முறையில் ஓட்டளித்துள்ளது, கணக்கெடுப்பு வாயிலாக தெரியவந்துள்ளது.அமெரிக்காவில் நவம்பர், 3ல், அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இதனால், அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தபால் வாயிலாக
USElection, PresidentElections, PrePollBallots, Voting, அமெரிக்கா, அதிபர், தேர்தல், தபால் ஓட்டு

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில், இதுவரை, 5.87 கோடி பேர், தபால் முறையில் ஓட்டளித்துள்ளது, கணக்கெடுப்பு வாயிலாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் நவம்பர், 3ல், அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இதனால், அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தபால் வாயிலாக ஓட்டளிக்கும் முறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தபால் முறையில் இதுவரை ஓட்டளித்தோர் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இது குறித்த கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவில், 18 மற்றும் அதற்கு அதிக வயதுடைய மக்களின் எண்ணிக்கை, 25.7 கோடி ஆக உள்ளது. இந்த அதிபர் தேர்தலில், 24 கோடி பேர், ஓட்டளிக்க தகுதி உடையோராக உள்ளனர்.


latest tamil news



அனைத்து மாகாணங்களிலும், தேர்தல் அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். அதில், பலரும் முன்கூட்டியே ஆர்வத்துடன், தபால் வாயிலாக ஓட்டளித்து வருவது தெரியவந்துள்ளது. இதுவரை, 5.87 கோடி மக்கள், ஓட்டளித்துள்ளனர். கடந்த, 2016 அதிபர் தேர்தலில், 5.83 கோடி பேர், தபால் வாயிலாக ஓட்டளித்தனர். ஆனால், இம்முறை தேர்தலுக்கு, இன்னும் ஒரு வாரத்திற்கும் மேல் உள்ள நிலையில், அதைவிட அதிகமான மக்கள் ஓட்டளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புளோரிடா, வட கரோலினா, பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களில், ஜனநாயக கட்சியின் ஜோ பிடனுக்கு ஆதரவாக, அதிகமானோர் ஓட்டளித்து இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தபால் ஓட்டுப்பதிவு அதிகமாக இருக்கும் என்பதால், தேர்தல் முடிவுகள் உடனடியாக வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. முடிவுகளை அறிய, கணிசமான நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu -  ( Posted via: Dinamalar Android App )
27-அக்-202015:42:25 IST Report Abuse
babu அமெரிக்காவே EVM ஐ நம்பவில்லை.
Rate this:
k ramani - chennai600087,இந்தியா
27-அக்-202016:01:22 IST Report Abuse
k ramaniதிஸ் ஐஸ் பே டு காரோண பில் understand...
Rate this:
27-அக்-202018:48:48 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )Babu அப்ப தானே பங்காளதேச கள்ளக்குடியேறி மூக்கனுங்களும் டீம்காவுக்கு கள்ள ஓட்டு போடுவானுங்க...
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
27-அக்-202011:33:17 IST Report Abuse
Dr. Suriya இந்த செய்தியே எதோ ஜோ பிடன் ஜெயிக்க வைக்கிறத்துக்காக அங்கு உள்ள ஊடகங்களின் வேலை... நம்ப உரு தியமுக கழக ஊடகங்கள் போல பொய் செய்திகளை வெளியிடுவது..இதுக்கு அப்புறம் ஒட்டு போட வருபவர்களின் மனதை மாற்ற ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X