பொது செய்தி

இந்தியா

"சமூக வலைத்தளம் இருபுறமும் கூரான கத்தி போன்றது. கவனமாக கையாள வேண்டும்..."

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பெண்களை மதிப்பவர்; உயர்வானவர்; பண்பாடு நிறைந்தவர். அவர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதை கண்டிக்கிறேன்- ம.தி.மு.க.,பொதுச் செயலர் வைகோ.'இப்படி, சப்போர்ட் பண்றதுக்குப் பதில், 'சமூக வலைதளம், இருபுறமும் கூரான கத்தி போன்றது, கவனமாக கையாள வேண்டும்' என, அவருக்கு அறிவுரை கூறுங்கள்...' என, கூறத் தோன்றும்
வைகோ, எச்.ராஜா, பீட்டர் அல்போன்ஸ், அண்ணாமலை

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பெண்களை மதிப்பவர்; உயர்வானவர்; பண்பாடு நிறைந்தவர். அவர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதை கண்டிக்கிறேன்
- ம.தி.மு.க.,பொதுச் செயலர் வைகோ.


'இப்படி, சப்போர்ட் பண்றதுக்குப் பதில், 'சமூக வலைதளம், இருபுறமும் கூரான கத்தி போன்றது, கவனமாக கையாள வேண்டும்' என, அவருக்கு அறிவுரை கூறுங்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், ம.தி.மு.க.,பொதுச் செயலர் வைகோ அறிக்கை.அனைத்து சமுதாய பெண்களையும் இழிவாக பேசும் திருமாவளவனுக்கு சமஸ்கிருதம் தெரியாது, சாஸ்திரமும் தெரியாது. பெண்களை இழிவாக பேசும் அவரை கண்டிக்காமல், ப.சிதம்பரம், ஸ்டாலின் வக்காலத்து வாங்குகின்றனர்
- பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா.


'அவங்க, கூட்டணியின் ஒரு கட்சித் தலைவர் இல்லையா; அவருக்கு ஆதரவாக பேசினால் தானே, பின்னர், இவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால், கூட்டத்தை கூட்டி, ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்த முடியும்...' என, விரக்தி தெரிவிக்கத் துாண்டும் வகையில், பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா பேச்சு.கட்சியில் எவ்வித அதிகார அங்கீகாரமும் இல்லாமலிருக்கும் என்னைப் போன்ற மூத்த தலைவர்களால், தன்னிச்சையாக ஒரு கட்சிக் கூட்டத்தை கூடக் கூட்ட முடியாது. ஆனாலும் கூட, எங்கள் அளவில் நிறைவாக கட்சிப் பணி செய்து கொண்டிருக்கிறோம்
- காங்., செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்.


latest tamil news

'காங்கிரசில், இப்படி அதிருப்தி குரல்கள் அதிகம் உள்ளன என்பது, குஷ்பு விலகலுக்கு பிறகே, மக்களுக்கு பகிரங்கமாக தெரிய வந்துள்ளது...' என, கூறத் துாண்டும் வகையில், காங்., செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி.எங்கு பெண்கள் பூஜிக்கப்படுகிறார்களோ, அங்கு தான் கடவுளும் இருக்கிறார். எங்கு பெண்கள் பூஜிக்கப்படவில்லையோ, அங்கு செய்யப்படும் காரியங்கள் பயனற்று போகின்றன. நல்லவற்றையே பார்ப்போம்; செய்வோம்
- தமிழக பா.ஜ., துணைத் தலைவர் அண்ணாமலை.


'எந்த கட்சியில் பெண்கள் பூஜிக்கப்படுகின்றனர்... சும்மா பெயரளவுக்குத் தான், பொறுப்புகள் வழங்கப்படுகின்றன; அரசியலில் ஆண்கள் ஆதிக்கம் தான் அதிகம்...' என, உண்மையை போட்டு உடைக்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., துணைத் தலைவர் அண்ணாமலை அறிக்கை.கம்யூனிஸ்ட் கட்சியை குழிதோண்டி புதைத்து விட்டதாக பெருமை பேசியவர்கள் முன், வரலாற்றை உருவாக்கியவர்கள் நாங்கள். அந்த முன்னேற்றம் தொடரும்
-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அச்சுதானந்தன்.


'எங்கே முன்னேற்றம் தொடர்கிறது; உங்கள் கட்சிக்கு, எல்லா மாநிலங்களில் பின்னேற்றம் தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், கேரள முன்னாள் முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அச்சுதானந்தன் அறிக்கை.


Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
27-அக்-202020:00:22 IST Report Abuse
madhavan rajan திருமா பெண்களை மதிப்பவர் என்றால் இவர் மதிக்காதவரா? திருமா பெண்களிடம் தவறாக நடந்துகொண்டு அடிபட்டு கைதான விஷயம் இவருக்கு தெரியுமா? அப்படிப்பட்டவர் மதிப்பவர் என்றால் இவருக்கு மதிப்பது என்றால் என்ன என்று தெரியாது போல.
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
27-அக்-202019:17:37 IST Report Abuse
mohan இந்தியா மக்கள் பகுத்தறிவு இல்லாதவர்கள்...அதனால் பணம் பல வழிகளில் விளையாடுகிறது...இப்பொழுது பெண்களை கேவல படுத்துகிறது...இந்தியா மக்கள் உண்மையான வீரத்தை இழந்து விட்டனர்.. இதே வார்த்தையை ராஜா ராஜா சோழன் காலத்தில் சொல்லி இருந்தால், கதையே வேற....
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
27-அக்-202017:10:52 IST Report Abuse
Baskar என்ன வை.கோ. அவர்களே உங்கள் வீட்டில் எல்லோரும் நலமா.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
27-அக்-202019:58:24 IST Report Abuse
madhavan rajanஇருபுறம் கூர் என்றால் திமுகவை எதிர்ப்பது பிறகு ஆதரிப்பது என்று இருபுறமுமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X